Sunday, October 07, 2018

On Sunday, October 07, 2018 by Tamilnewstv   
திருச்சி_07.10.18

பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை  ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...

வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,

இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத,  தேர்தல் ஆணையத்தின் முடிவை  ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய்  ஊழல் நடந்துள்ளதாக  கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த  ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.

0 comments: