Saturday, December 01, 2018

On Saturday, December 01, 2018 by Tamilnewstv   
திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

0 comments: