Saturday, December 01, 2018

On Saturday, December 01, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: