Sunday, December 23, 2018

On Sunday, December 23, 2018 by Tamilnewstv   
திருச்சி     23.12.18

தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி  திருச்சியில் கருஞ்சட்டை பேரணியும், தமிழர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெறுகிறது

பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும்
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் தேர்தல் அரசியலை முன்னெடுக்காத அமைப்புகள்
என உள்ளிட்ட
150-க்கும் மேற்பட்ட
பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இம்மாநாடுக்கு முன்னதாக சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் `கருஞ்சட்டை’ அணிந்து திருச்சி தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்னூர் ரோடு வழியாக மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன்,
மே.17 இயக்கம் திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்

0 comments: