Saturday, December 29, 2018

On Saturday, December 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி

தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பாக திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ER மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது


நிகழ்ச்சியில் ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர் தலைமை வகித்தார் சந்திரசேகரன் மாவட்ட தலைவர் வரவேற்புரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் முனைவர் மு உதயகுமார் சிறப்புரையாற்றினார் மாநில பிரச்சார செயலாளர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் பள்ளி மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்


இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார் கூறியபோது மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தை இப்போது குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று தலைமையாசிரியர் ஆசிரியைகளின் முழு வேலை நேரத்தை கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக நலத்திட்டங்களுக்கு ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி க்கும் நல திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது மேலும் விலையில்லா மடிக்கணினி வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இருப்பு வைத்து பொது பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்து குறுகிய கால அளவில் அனைத்து பள்ளிகளும் பெற்று வழங்க ஆவன செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்


பேட்டி ...
மாநில அமைப்பு செயலாளர்
முனைவர் உதயகுமார்

ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர்

0 comments: