Showing posts with label Trichy reporter r.sabarinathan. Show all posts
Showing posts with label Trichy reporter r.sabarinathan. Show all posts

Friday, July 08, 2022

On Friday, July 08, 2022 by Tamilnewstv in    

திருச்சி



வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கணவன் மனைவியை  கொலை வெறி தாக்குதல் 

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அம்பலக்காரர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர்  இவரது மனைவி சகாய மேரி. இவர்களுடன் சகாய  மேரியின் தந்தையும் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முத்துமாணிக்கம் வயது 35 இவருக்கும் ஜான் பீட்டருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜான் பீட்டர் தனது வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றபோது அவரை வழிமறித்த முத்து மாணிக்கம் வழக்கை வாபஸ் வாங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அருகில் கிடந்த கல்லைக் கொண்டு ஜான் பீட்டர் முகத்தில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜான் பீட்டர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன்னை தாக்கிய முத்துமாணிக்கம் மீது புகார் அளித்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அறிந்து கொண்ட முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோர் ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டிற்கு வந்தனர். ஜான் பீட்டர் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவரது மனைவி சகாய மேரியை தாக்கி இரும்பு கடப்பாரையால் கை மற்றும் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அறிந்து வந்த ஜான் பீட்டர் உடனடியாக தனது மனைவியை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடப்பாரையால் வயிற்றில் குத்தியதில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.கொலை வெறியுடன் கணவன் மனைவியை தாக்கிய முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோரை கைது செய்யக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் பீட்டர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதில் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து மாணிக்கம் தற்போது தலைமுறைவாகியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/-SCxEDkWN4I

Monday, February 07, 2022

On Monday, February 07, 2022 by Tamilnewstv in ,    

 


திருச்சி கம்பரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டையில் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நாலு கால யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.45 மணிக்கு கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து 10.15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வானது முத்துக் குமார சிவாச்சாரியார், சதீஷ் சிவாச்சாரியார், பிரபு சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள், ராதே கிருஷ்ணா வெல்ஃபேர் டிரஸ்ட், மணி ஐயர் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள் மணி அய்யர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், திருப்பணி குழுவினர் கண்ணன், ரவிசங்கர், கோவிந்தராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். 


Saturday, December 11, 2021

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    

 திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது

ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

On Saturday, December 11, 2021 by Tamilnewstv in ,    
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்  சிறப்புரையாற்றினார்.

முன்னதாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் குரு.அரங்கநாதன் மற்றும் தொழிலதிபர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பயிற்றுநர்கள் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு படித்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 05, 2021

 கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!!


 பொதுநல வழக்கறிஞர் திரு. வேங்கை ராஜா அவர்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


பின்னர் மாண்புமிகு. நீதிபதி அவர்கள் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து வழக்கறிஞருடன் பொதுநலவழக்குகள் குறித்தும் பொதுநல வழக்குகள் தொடுப்பவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த என்ன என்ன பாதுகாப்பு உள்ளது என்பதனை வலியுறுத்தியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பிறகு இயற்கை வளங்களைக் காப்பது குறித்தும் இயற்கை வளங்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மூலிகைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக புரியும் வண்ணம் எடுத்துரைப்பது பற்றியும், பொதுமக்களின் பாதுகாப்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.


மேலும்  பொது நலன் பாதுகாப்பு பொதுமக்களின் பாதுகாப்பு இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது


Thursday, September 30, 2021

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு உற்சாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்  வைகோ தஞ்சாவூர் செல்வதற்காக திருச்சி வருகை தந்தார்.


ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில், திருச்சி - மதுரைசாலை சாரநாதன் பொறியியல் கல்லூரி  அருகில் வரவேற்பு  கொடுக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு, நம் தலைவரின் திருமுகம் காண ஏராளமானோர் குவிந்தனர்


 இந்நிகழ்வில்,திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக, வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன்,திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்மணவை தமிழ்மாணிக்கம்,திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர்,மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர்   ரொஹையா  ஷேக் முகமது தலைவரின் நேர்முக உதவியாளர் அடைக்கலம் , மைக்கேல் ராஜ் அரசியல் ஆய்வு உறுப்பினர் பாலுச்சாமி தெற்கு மாவட்ட அவைத்தலைவர்


மற்றும்திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,திருச்சி மாநகர பகுதிக்கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் - தொண்டர்கள்  அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

 பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது



பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் 29 ம் தேதி நேற்று மாலை கொண்டாடப்பட்டது. 

இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது 


இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். 


இதில் பொதுநல வழக்கறிஞர்  வேங்கை ராஜாவிற்கு சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் 


தனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் இந்த பிறந்தநாள் விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது எனவும் கூறினார்

Monday, September 27, 2021


 திருச்சி பெட்டவாய்த்தலை செல்லும் வழியே உள்ளே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சமுதாய வளைகாப்பு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் தலைமையில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோகிலா கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்  அந்தநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வளைகாப்பு  ஜாதி மதம் பேதமின்றி அனைத்து சமுதாய கர்ப்பிணி பெண்களுக்கும் அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்



 மாமிசங்களை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் எப்பொழுது தங்களுக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் பிரசவிக்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று திருமண மண்டபம் கர்ப்பிணி பெண்களுக்கு என்று கேட்டவுடன் இலவசமாக அனுமதி அளித்த திருமண மண்ட உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தார்

Wednesday, September 15, 2021

 பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர்டி. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி.சந்திரசேகரன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சின்னதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுருளி என்கிற நீலகண்டன், மதுரை பாண்டியன், மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் ஜோதி பாண்டியன் ,மாயி பாலு ,வினோத் மண்ணச்சநல்லூர் ஒன்றியசெயலாளர் பாட்ஷா கணேசன், மாரியப்பன், ஈச்சம்பட்டி போஜன், மண்ணச்சநல்லூர் பழனியாண்டி,ஜோசப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, September 08, 2021

 தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் 


தமிழ்நாடு அரசுத் துறையின் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மொ.சிராஜூதீன், தலைமையில் நடைபெற்றது


1/01/2020 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 11% அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கியவாறு 1/7/2021 முதல் வழங்குதல் 

2015 நவம்பர் முதல்நாளதுவரை வழங்க வேண்டியபஞ்சப்படி நிலுவையை போக்குவரத்து ஓய்வுதியர்க்கு தாமதமின்றி வழங்க வேண்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்க்கு அமல் படுத்த வேண்டும் மாநில அரசு ஓய்வூதியர் மின்வாரிய ஓய்வூதியர்க்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படும் செலவுத் தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதையும் மருத்துவ காப்பீட்டு திட்டதில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்தமிழ்செல்வன், சண்முகம், கிருஷ்ணன், பஷீர், டெரன்ஸ், உள்ளிட்டோர் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்

Tuesday, September 07, 2021

 திருச்சி இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அந்தநல்லூர் திருச்சி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அந்தநல்லூர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருச்சிராப்பள்ளி மாவட்டம் நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் கோவிட் நோய்த்தடுப்பு மற்றும் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் துரைராஜ் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி தேவி பத்மநாபன் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கூறுகையில் சத்துணவு பெற்று வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் சிப்ஸ்  போன்றவைகள் சத்துணவில் கொடுக்கப்பட்டால் விவசாயிகளின் பிரச்சினை இன்று இரவு குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்தது போல் இருக்கும் என்று தெரிவித்த முதல்வரிடம் கூறவேண்டும் தெரிவித்தார்


ஒன்றியக் குழுத் தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் தமிழக முதலமைச்சர் சத்துணவு பெரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் அவசியம் என்று முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பதவி ஏற்ற பிறகு குழந்தைகளுக்கு சத்துணவு வாழைப்பழம் அவசியம் என்று தெரிவித்துள்ளார் என்று கூறினார்


இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் கள விளம்பர உதவியாளர் இந்திய அரசு மக்கள் தொடர்பு கள அலுவலகம் திருச்சிராப்பள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தேவி பத்மநாபன் கள விளம்பர அலுவலர் இந்திய அரசு மக்கள் தொடர்புகளை அலுவலகம் திருச்சிராப்பள்ளி நோக்க வரை ஆற்றினார் துரைராஜ் ஒன்றிய குழுத்தலைவர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தலைமை வகித்தார் ஆதிசிவன் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசநல்லூர் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முன்னிலை வகித்தார் 


மருத்துவர் சுப்பிரமணி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லியோ பீமாராவ் வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி திருமதி சகுந்தலா வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி புவனேஸ்வரி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமதி கோகிலா குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், அந்தநல்லூர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் சுரேஷ் கண்ணன் ஊராட்சி செயலாளர் முத்தரசன் ஊராட்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நன்றி உரையாற்றினார்

 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயிரம்  பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கிடவும் குறைந்தபட்ச ஊதியம்  மற்றும் ஓய்வூதியம் வழங்கி வரும் உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்தும் ஏபிசி சுழற்சி முறை பணியிடமாறுதல வரவேண்டும் கொரோனாவால் உயிரிழந்த பணியாளருக்கு நிவாரண நிதி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிடவும் சிறு சிறு தவறுக்காக ஆண்டுக்கணக்கில் மதுபான கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக கடை பணியில் அமர்த்திடவும் பல்வேறு காரணங்களினால் பணியின்றி ஆண்டு கணக்கில் உள்ள பணியாளர்கள் பணி வழங்கிடவும் பல மாவட்டங்களில் மேலாண்மை இயக்குநரின் உத்தரவை மதிக்காமல் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்ட மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 5 மாவட்ட மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .


 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம் ,கோவிந்தராஜன் , மாநில செயலாளர்கள்கல்யாணசுந்தரம் ,முருகானந்தம் கா.இளங்கோவன் ,இரா.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம்மாநிலத் தலைவர்பி.கே. சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Monday, August 30, 2021

 *காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகா அரசைக் கண்டித்து துவாக்குடியில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்*


திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் இன்று, துவாக்குடியில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், துணை போகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாநில விவசாய அணிச்செயலாளர் புலவர் க.முருகேசன் தலைமையில் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தை விளக்கி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.


இதனைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய மோடி அரசையும் கண்டித்து கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், புஸ்பா சுப்பிரமணியன், வைகோ சுப்பு, ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டம் எம்.தங்கவேலு, திருவெறும்பூர் மு.திருமாவளவன், சி.பீட்டர், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் எம்.ஏ.சரவணன், அந்தநல்லூர் சுரேஸ், மணப்பாறை ப.சுப்ரமணியன், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்மராஜ், தீர்மானக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை பொ.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மிசா சாக்ரடீஸ், எஸ்.பி.சாமிநாதன்,  பொதுக்குழு உறுப்பினர் ஆ.மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பீட்டர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சாத்தனூர் ஆ.முகேஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ந.ரேணுகாதேவி, மவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பாத்திமா, வளர்மதி, நகர மகளிர் அணி அமைப்பாளர் மணிமேகலை, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், முனியசாமி, சரவணக்குமார், துரை.கண்ணன், கார்த்திக், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, August 22, 2021

 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் வருவதை முன்னிட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, சாலை பராமரிப்பு மற்றும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. 


நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதியில் நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் படியும் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும் என என்னுடன் ஆய்வுகளின் போது கலந்துகொண்ட அதிகாரிகளிடம் முறையிட்டும்  வலியுறுத்தி கேட்டு கொண்டும், ஒரு சில பணிகளைத் தவிர பல பணிகள் செய்யாமல் இருப்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் கிழக்கு தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிட தேவையான சுகாதார நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 

 இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர், செயற்பொறியாளர் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை பகுதி 9 வது வார்டு ஆய்வின் தொடர்ச்சியாக வார் டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும்  சுகாதாரப் பணிகளை மேற் கொண்டு மின் வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திட வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 


ஒடத்தெரு காவிரி பாலம் பகுதியில் உள்ள இளைஞர்கள் கைப்பந்து திடல் அமைத்து தருமாறு விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். அந்தோணியார் கோவில் தெருவில் கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை என்னுடன் ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொண்டார். இந்த ஆய்வுகளின் போது  பகுதி கழக செயலாளர் திரு.மதிவாணன், வட்ட கழக செயலாளர் திரு. சண்முகம், கழக  நிர்வாகிகள் ஜம்புலிங்கம் கணேசன், நவம், செபாஸ்டின், கந்தன், சக்திவேல், பரிமாணம், மோகன், தீனதயாளன், குமார், அணி நிர்வாகிகள் மகேஷ்வரன், ஜெய் ஆகாஷ், முத்து தீபக், தினேஷ் மற்றும் கழக தோழர்கள்  பொதுமக்கள் உடன் இருந்தனர்.

 


தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் திருவெறும்பூரில் நடந்த கோவை பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்க முதலாமாண்டு துவக்க விழாவில் கோரிக்கை வைத்தனர்.

விழாவிற்கு மாநில தலைவர் சதுரகிரி அலி தலைமை வகித்தார்.மாநிலச் செயலாளர் சித்திக் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம்

 மாநில பெய்ண்டர்களுக்கு,தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும்.என்று கோரிக்கை மனுவை வழங்கினார்கள்  மனுவை பெற்றுக்கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து முதல்வரிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி கூறினார்.


மேலும் பெய்ண்டர்கள் மற்றும் ஓவியர்கள் தான் அரசியல்வாதிகளை அழகாக வரைந்து மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதாகவும் கூறினார்.

இந்த விழாவில் பெயிண்டர் கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்


              திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி -க. ஆஷாதேவி  20 21 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ‌.


இந்நிகழ்வின் போது திருச்சிராப்பள்ளமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி அவர்கள் மற்றும் மணிகண்டம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் திரு. மருதநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்

Saturday, August 21, 2021

 திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.


பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி தொல்.திருமாவளவனுக்கு மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் பாராட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது. இவ்விழாவில்  பெரியார் மண் மீட்ட தமிழ் மானப் போராளி என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமூக நீதி பேரவை சார்பில் திருமாவளவன் , நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோருக்கு  பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தினர். 



 செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் - சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பேட்டி.


திருச்சிமாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக   மாவட்ட மைய நூலகத்தில்  நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் விழா இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ்  பொய்யாமொழி  நூலகர்களையும்,  நன்கொடையாளர்களையும் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார்.   

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ...

தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் - அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு பணிகளை  மேற்கொண்டு வருகிறோம்.

மாஸ்க் அணிவது,கிருமி நாசினி பயன்படுத்துவது,குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

பொது சுகாதர துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம்,அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைபிடிக்க உள்ளோம்.

9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம்.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

150 மாணவர்கள் அமர்ந்து படித்து வந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்து உள்ளது எனவே மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பை கண்டிப்பாக மேம்படுத்துவோம் என கூறினார்.

 திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வை ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருச்சிராப்பள்ளி இ.ஆர். மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்கள் திருச்சிராப்பள்ளி என்.ஐ.டி.யில்  சேருவதற்கு அடிப்படையான  ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி  வழங்கப்படுவதற்காக,தேர்ந்தெடுக்கப்படவுள்ள  மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று ஆகஸ்ட் 21 பார்வையிட்டார்.