Friday, July 08, 2022

On Friday, July 08, 2022 by Tamilnewstv in    

திருச்சி



வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கணவன் மனைவியை  கொலை வெறி தாக்குதல் 

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அம்பலக்காரர் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர்  இவரது மனைவி சகாய மேரி. இவர்களுடன் சகாய  மேரியின் தந்தையும் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் முத்துமாணிக்கம் வயது 35 இவருக்கும் ஜான் பீட்டருக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜான் பீட்டர் தனது வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் சென்றபோது அவரை வழிமறித்த முத்து மாணிக்கம் வழக்கை வாபஸ் வாங்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் அருகில் கிடந்த கல்லைக் கொண்டு ஜான் பீட்டர் முகத்தில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜான் பீட்டர் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து தன்னை தாக்கிய முத்துமாணிக்கம் மீது புகார் அளித்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததை அறிந்து கொண்ட முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோர் ஜான் பீட்டரை தேடி அவரது வீட்டிற்கு வந்தனர். ஜான் பீட்டர் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவரது வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவரது மனைவி சகாய மேரியை தாக்கி இரும்பு கடப்பாரையால் கை மற்றும் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அறிந்து வந்த ஜான் பீட்டர் உடனடியாக தனது மனைவியை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடப்பாரையால் வயிற்றில் குத்தியதில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.கொலை வெறியுடன் கணவன் மனைவியை தாக்கிய முத்துமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் முத்தையன் ஆகியோரை கைது செய்யக்கோரி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் பீட்டர் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதில் முத்தையன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து மாணிக்கம் தற்போது தலைமுறைவாகியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/-SCxEDkWN4I

0 comments: