Monday, February 07, 2022

On Monday, February 07, 2022 by Tamilnewstv in ,    

 


திருச்சி கம்பரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம் பேட்டையில் ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நாலு கால யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9.45 மணிக்கு கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து 10.15 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வானது முத்துக் குமார சிவாச்சாரியார், சதீஷ் சிவாச்சாரியார், பிரபு சிவாச்சாரியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

மேலும் இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த கம்பரசம்பேட்டை பொதுமக்கள், ராதே கிருஷ்ணா வெல்ஃபேர் டிரஸ்ட், மணி ஐயர் ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கோவில் அறங்காவலர்கள் மணி அய்யர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், திருப்பணி குழுவினர் கண்ணன், ரவிசங்கர், கோவிந்தராஜன் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு விசாலாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். 


0 comments: