Monday, August 30, 2021
*காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகா அரசைக் கண்டித்து துவாக்குடியில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்*
திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் இன்று, துவாக்குடியில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசையும், துணை போகும் ஒன்றிய அரசையும் கண்டித்து மாநில விவசாய அணிச்செயலாளர் புலவர் க.முருகேசன் தலைமையில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகா அரசையும், ஒன்றிய மோடி அரசையும் கண்டித்து கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், புஸ்பா சுப்பிரமணியன், வைகோ சுப்பு, ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டம் எம்.தங்கவேலு, திருவெறும்பூர் மு.திருமாவளவன், சி.பீட்டர், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் எம்.ஏ.சரவணன், அந்தநல்லூர் சுரேஸ், மணப்பாறை ப.சுப்ரமணியன், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.தர்மராஜ், தீர்மானக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை பொ.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மிசா சாக்ரடீஸ், எஸ்.பி.சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ஆ.மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பீட்டர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சாத்தனூர் ஆ.முகேஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ந.ரேணுகாதேவி, மவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் பாத்திமா, வளர்மதி, நகர மகளிர் அணி அமைப்பாளர் மணிமேகலை, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், முனியசாமி, சரவணக்குமார், துரை.கண்ணன், கார்த்திக், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment