Thursday, May 30, 2019
திருச்சி
உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும் - திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வைத்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என் நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஆக இது நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலை கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் மக்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு ஆண்டு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971 ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் காரணமாக டெல்டாவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது என்றார். கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணியாற்றிய திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Share on facebook More Sharing Services கனடாவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது எட்டு உடல் உ...
-
திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). சம்பவத்தன்று வேலைக்கு செல்ல ரோட்டை கடப்பதற்காக ரோட்டோரம் நின்றுகொண்டி...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
ருமங்கலம் அருகே உள்ள கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராமுக்காளை. இவரது மகன் பச்சையாண்டி (வயது15), திருமங்கலம் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
0 comments:
Post a Comment