Friday, May 24, 2019
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர்
திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
திருநாவுக்கரசர்
பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment