Monday, May 20, 2019

On Monday, May 20, 2019 by Tamilnewstv   

ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அனைத்து  கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வைத்தார். ஆனால் இது வரை அவர்கள் விடுதலை செய்யவில்லை.  தற்போது உச்சநீதிமன்றமும் இந்த விடுதலை விவகாரம் கவர்னர் முடிவில் உள்ளது என கூறி விட்டது. இந்நிலையில் இன்று காலை

 27 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர் இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில்
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் 500 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் 20க்கு மேற்ப்பட்டன்  ஈடுப்பட்டனர்.
பேட்டி : லெனின்,
   இந்திய ஜனநாயக      வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்

0 comments: