Monday, July 29, 2019

On Monday, July 29, 2019 by Tamilnewstv   
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது



அப்போது  விளக்க உரையாற்றிய முருகானந்தம் மாநில செயலாளர் கூறுகையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டமானது ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கூட விற்கிறார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து கொண்டு உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்  ஒரு மாவட்ட மேலாளர்களை அடுத்த மாவட்டத்திற்கு அனுப்பி அவர்களை ஆய்வு செய்ய சொல்வது அநாகரீகமான முறையாக இருக்கிறது இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் மாநிலச் செயலாளர் தலைமை வகித்தார் பிச்சைமுத்து செல்வம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சாகுல் அமீது  தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில பொருளாளர் சிறப்புரையாற்றினார் முருகானந்தம் மாநிலச் செயலாளர் விளக்கவுரையாற்றினார்



பேட்டி முருகானந்தம் மாநில செயலாளர் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்

0 comments: