Thursday, March 19, 2020

On Thursday, March 19, 2020 by Tamilnewstv in    
பல டாக்டர் பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றும் அறம் மக்கள் நல சங்கத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா .

திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.

எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற  பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம்  டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

0 comments: