Wednesday, March 18, 2020

On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in    
மாஸ்க் அணிந்து கட்டுமானப்பணி

கே.சி.பி நிறுவனம் அசத்தல்

கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள்,  பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு நடத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து வேலை செய்ய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக 1000 மாஸ்க் வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.  கட்டுமான பணி செய்யும் தொழிலாளர்கள் அலுவலக ஊழியர்கள் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். கைரேகை பதிவு இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கே.சி.பி இன்ஜினியர் ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் கூறுகையில் " தொழிலாளர்கள் பாதுகாப்பு மிக அவசியம். ஒரே இடத்தில் அதிக தொழிலாளர்கள் வேலை செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருமல் தும்மல் போன்ற வற்றால் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம். தினமும் 10 முதல் 15 முறை கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  எங்களைப் போல மேலும் பல கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும்." என்றார்.

0 comments: