Monday, March 09, 2020

On Monday, March 09, 2020 by Tamilnewstv in    
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப், இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எஸ்டிபிஐ கட்சி ஹஸன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய, தமிழக அரசுகளுக்கு எதிராகவும்  கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் உதுமான் அலி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட திருத்தம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் கைவிடுவோம் என்றார்.

0 comments: