Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டத்தை ஆதரித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்று வருகிறது.


 இந்த வகையில் இந்து முன்னணி சார்பில் இன்று திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் எதிரே குடியுரிமை சட்டத்தை  ஆதரித்து ஒருநாள் தொடர் நாமாவளி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், உறையூர் பகுதி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமியர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து முன்னணியினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி: முருகானந்தம், இந்து முன்னணி, மாநில பொதுச் செயலாளர்.

0 comments: