Saturday, April 25, 2020
On Saturday, April 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் மீது வழக்கா?
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சார்பில் ஊரடங்கால் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி உறையூரில் இன்று நடைபெற்றது.
உறையூர் வாத்துக்காரத் தெருவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 பேருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பெட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, அந்தோணியார் தேவாலய பங்குத் தந்தை தாமஸ் ஞானதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த பொருட்களை பெற சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் தேவாலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் நெருக்கிக் கொண்டும், முண்டியடித்துக்கொண்டும் வரிசையில் நின்றனர். ஏற்கனவே அரசு அலுவலர்கள் முன்னிலையில் தான் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எந்த அரசு அலுவலர்களும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் கூட்டம் கூடியிருக்கும் தகவல் கிடைத்து உறையூர் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். எனினும் பொது மக்கள் பலர் முக கவசம் கூட அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் வரிசையில் நின்று பொருட்களை பெற்று சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment