Thursday, April 30, 2020

On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.  இதனால் திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள அமர் ஜூவல்லரி சார்பில் இன்று ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் 5 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் திருச்சி ஆற்று காவேரி பாலத்தில் தினம்தோறும் ஏழை எளியவர்களுக்கு விடட்டோருக்கும்  மாநகராட்சி நிர்வாகம் மூலமாக இது நாட்களாக சுமார் 
50 பேர்களுக்கு உணவு வழங்கி வந்த இடத்தில்

தற்போது சுமார் 300க்கு மேற்பட்டோர் வருகின்றனர். 

இது குறித்து பேசிய அமைச்சர் வெல்லமண்டி  நடராஜன் அனைவருக்கும் உணவு வழங்கும் வகையில் 

மாவட்ட நிர்வாகம் விடட்டோரை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்கபட்டு வருகிறது, 

மேலும் அம்மா உணவகம் மூலமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது எனவே அதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.

0 comments: