Monday, April 27, 2020
On Monday, April 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
வியாபாரிகள் எதிர்பை தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை ஜீ-கார்னருக்கு மாற்றப்பட்டது - சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது
கொரனா பாதிப்பை தொடர்ந்து
திருச்சி காந்தி மார்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாததால் உடனடியாக
மார்கெட்டை திருச்சி - சென்னை பை பாஸ் நெடுச்சாலையில் உள்ள பழைய பண்ணையில் தற்காலிக சந்தை இயங்கி வந்தது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், கொரோன விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
ஆனால் இதையும் மீறி மக்கள் தொடர்ந்து கூட்டமாக வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சந்தையை பால்பண்னையிலிருந்து சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனே திருச்சியில் காந்தி மார்கெட் வியாபாரிகள் சங்கங்களில்
27சங்கங்கள் இணைத்து இதை ஏற்க முடியாது என கூறி
காந்தி மார்கெட்டில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்
வரை காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால் வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில்
அமைச்சர் வெல்மண்டி நடராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஊரடங்கு முடியும் வரை அதாவது 3- ஆம் தேதி வரை பால்பண்ணையில் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அரியமங்கலம் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் இயங்கி வந்த பால்பண்ணை மொத்த காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பினை தொடர்ந்து இன்று இரவு முதல் பொன்மலை ஜீ கார்னர் மைதானத்துக்கு மாற்றப்படும் எனவும், தினந்தோறும் இரவு 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செயல்படும். சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் இங்கு வரக்கூடாது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இதனையடுத்து இன்று இரவு மார்கெட் உடனடியாக பொன்மலை ஜீ. கார்னர் மைதானத்தில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில்லரை வியாபாரத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும் என கூறி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
கர்நாடக . கேரளா, அந்திரா உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் ஊட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காய்கறிகளை லாரியை விட்டு இறக்காமல் நிறுத்தி வைத்தனர். சிறு விவசாயிகள் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்த காய்கறிகளையும் இறக்காமல் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி மற்றும் கோட்டை தாசில்தார் மோகன் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .இதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், தமிழ்நாடுவணிகர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் மொத்த வியாபாரி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளை கணக்கெடுத்து உரிய முறையில்
நாளை முறைப்படி டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் சில்லறை வியாபாரமும் நடைபெறும் என முடிவு காணப்பட்டது.
அதன்
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் சில்லரை வியாபாரிகளும் இன்று கடை போடலாம் என கூறியதையடுத்து லாரியிலிருந்து காய்கறிகள் இறக்கப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய துவங்கினர். இதனை தொடர்ந்து சில்லரை வியாபாரிகளும் வியாபாரத்தை துவங்கினர்.
இங்கு என்ன காரணத்திற்க்காக மாற்றப்பட்டதே அந்த சமூக இடைவேளை என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
0 comments:
Post a Comment