Thursday, April 02, 2020

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 02

திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
4யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                           (அப்துல்லா)


                 
                         ( முகமது அலி)

( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.

இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.



 அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி  சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக  கூறினார்.

0 comments: