Thursday, April 30, 2020

On Thursday, April 30, 2020 by Tamilnewstv in    
*முசிறி அருகே நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை காரில் அழைத்து சென்று விட்ட சமூகதொண்டு நிறுவனம்* . 
   திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் கடலூர் மாவட்டத்திற்கு நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை சமூகஆர்வலர்கள் காரில் அழைத்து சென்று சொந்தஊரில் விட்டுவந்த சம்பவம் பொதமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
முசிறி அருகே உள்ள தா.பேட்டை வழியாக நாமக்கல் மாவட்டம், தூசூர் என்ற இடத்திலிருந்து 5 கூலித்தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு கிராமத்திற்கு நடந்துசென்றனர். 144 தடை உத்தரவு காரணமாக தொழிpல்பாதிப்படைந்து வறுமையில் வாடியதாலும், பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், தூசூரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவை நடந்துசெல்வதற்கு முடிவு எடுத்து 30 கிலோமீட்டர் நடந்துவந்த நிலையில் தா.பேட்டையை சேர்ந்த வாசவி தொண்டு நிறுவனத்தினருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து தா.பேட்டை போலீசாருடன் இணைந்து வாசவி தொண்டு நிறுவனத்தினர் தொழிலாளர்களுக்கு உணவு ,பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிகொடுத்து கார் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

0 comments: