Sunday, May 31, 2020

On Sunday, May 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி

சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மருதம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்னையிலிருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு அறிகுறி தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொட்டியம் தாலுகா,  மருதம்பட்டியைச் சேர்ந்தவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து மருதம்பட்டிக்கு வந்துள்ளருக்கு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று வந்ததில்  தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அந்த நபரை உரிய பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சுகாதார குழுவினர்  அவர் வசித்த தெருக்களை சுத்தப்படுத்தி ,கிருமி நாசினி மருந்து  தெளித்தனர்.

0 comments: