Saturday, June 06, 2020

On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
*ஜி - கார்னரில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* 

 *தியாகி வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை* 

    உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரசின் கோரத் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக திருச்சியின் மையப் பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டை மக்களின் நலன் கருதி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் 1.4.2020 முதல் பூட்டி சீல் வைத்தது.  

     மக்களை காப்பாற்றுவதற்காக அரசு எடுத்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்த அனைத்து காய்கறி வியாபாரிகளும் பொன்மலை ஜி - கார்னரில் வியாபார செய்து வருகின்றனர். இடையில் மழை பெய்த போதும் பொது படுத்தாது தங்கள் வியாபாரம் மூலம் பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் தரமான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். 

     இதனிடையே ஒரு சில அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த பலமுறை முயன்றும் முடியாமல் போனதால் தற்போதுள்ள சூழ்நிலையை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வியாபாரிகளின் ஒரு பிரிவினரை அரசுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதை தடை செய்யும் விதமாகவும், எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.  

     இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைவர் மார்க்கெட்டை பூட்டும் போது வராமல் இருந்து விட்டு இப்போது வந்து *7.6.2020-ல்  காந்தி மார்க்கெட் திறக்கவில்லை என்றால் 8.6.2020 முதல் காலவரையின்றி காய்கறி வியாபாரம் செய்ய மாட்டோம்* என்று அறிவித்துள்ளனர். 

     அந்த தலைவரின் இந்த அறிவிப்பானது  மொத்தம், கமிஷன் மண்டி வியாபாரிகளை விட சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதோடு நுகர்வோரும், பொது மக்களும் காய்கறி கிடைக்காமல் சிரமப்படுகின்ற சூழல் ஏற்படும் என்பதை அந்த தலைவர் புரிந்து கொள்ளவில்லை.  

     சில நபர்களின் சுயநலத்தால் சில்லரை வியாபாரிகள், வியாபாரம்  செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயகரமான சூழலும் நிலவுகிறது. ஆனால் சில்லரை வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரம் செய்திட முயற்சிக்கும் போது, பாதுகப்பற்ற சூழல் ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தங்களின் வாழ்வாதரத்தை எண்ணியும் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு மாநில அரசும்,மாவட்ட நிர்வாகமும் உரிய போலீஸ் பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

     சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்காக வருகின்ற  லாரிகளை தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு பெரும் பண முதலைகள் தலைமை தாங்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. 

 *வியாபாரிகளை நசுக்க துடிக்கும் சேகரன்* 

     நுகர்வோர் சேவை அமைப்பு என்கிற பேரில் இயக்கம் நடத்துகின்ற சேகரன் அவர்கள் நுகர்வோர் நலன் சார்ந்து செயல்படாமல் இல்ல வையாபாரிகளை நசுக்குவதிலேயே குறியாக இருந்து வருகிறார்.  வியாபாரிகள் வரிகளை முறையாக செலுத்தினால்தான் அரசுக்கு வருவாய். அதைக் கொண்டுதான் மக்கள் நல திட்டங்களையும் நுகர்வோர் நலன் சார்ந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்த முடியும். அரசின் வருவாயை கெடுக்கின்ற வகையில் செயல்பட்டு இல்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுப்பதிலேயே குறியாக உள்ள சேகரன் அவர்கள் நுகர்வோர்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பதை தடை செய்ய முயற்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை.  

     வியாபாரிகளின் வாழ்வோடு விளையாடும் சேகரன் பசுமை தினமான இன்று (6.6.2020) எத்தனை மரக்கன்றுகள் நட்டார் என்பதை சொல்ல முடியுமா?  

      நாட்டில் மாசுக்களை ஏற்படுத்துகின்ற எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. மதுப்பழக்கத்தால் நாட்டில் எவ்வளவோ குற்ற செயல்கள் நடக்கின்றன.  அந்த ஆலைகளையெல்லாம் இழுத்து மூட சேகரன் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது தானே?  அவர்களுக்கு எதிராக அந்த போராட்டத்த எந்த போராட்டத்தையும் நடத்த மாட்டார். ஏனெனில், அவர் எப்போதும் ஏழைகளுக்கெதிரான போராட்டத்தை மட்டுமே கையில் எடுப்பார் என்பதற்கு வேறு அன்று தேவையில்லை.  பண முதலைகள் பக்கம் மட்டுமே எப்போதும் நிற்பார். 

     ஒரு காலத்தில் வியாபாரியாக இருந்து பல முறைகேடுகளை செய்து அதில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் அந்த தொழிலை விட்டு ஓடி வந்தவர் தான் இந்த சேகரன்.  அதனால்தான் என்னவோ வியாபாரிகளை, அதிலும் குறிப்பாக சில்லரை வியாபாரிகளை நசுக்குவதையே தொழிலாக கொண்டுள்ளார்.

     இவரைப் போன்றவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

 *ஆ.வையாபுரி* , 
 *நிறுவனர் / தலைவர்,* 
" *தியாகி" வ.உ.சி.* *ஒர்க்கர்ஸ் யூனியன்* ,
*Cell: 95002 - 99882.*

0 comments: