Monday, June 08, 2020

On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களின் மகன் மணி. மருமகள் சுமதி ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் ஏலச்சீட்டு மற்றும் பிடி சீட்டு, குலுக்கல் சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். 

இவர்களிடம் திருச்சி கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, நாயுடு மஹால், கமலா நேரு நகர், என்எஸ்பி ரோடு, சத்யமூர்த்தி நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சீட்டு சேர்ந்துள்ளனர்.

 மேலும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 34 பேரிடம் தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். அதேபோல் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் கொடுக்காமலும், வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்தவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்காமல் பழனிச்சாமி குடும்பத்தினர் மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


 இந்த வகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டால் தரக்குறைவாக பேசுவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து மகா சபா மாநில துணைத் தலைவர் பரமானந்தன் தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆணையர் வரதராஜுவை  சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உத்தரவாதம் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 பேட்டி: இந்து மகா சபா மாநிலத் துணைத் தலைவர் பரமானந்தன்.

0 comments: