Saturday, June 06, 2020

On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் எலி மருந்து சாப்பிட்டு 2018-ல் 138 பேரும், 2019-ல் 165 பேரும், 2020 மே மாதம் வரை 63 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

எனவே, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்கும் வகையில் திருச்சி சரகத்தில் சட்ட விரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் 228 கடைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 160 கடைகளும், புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும்.

இதற்கிடையே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர் நல ஆய்வாளர்கள், தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர். 

திருச்சிக்கு அஜீம் -94981 10803, புதுக்கோட்டைக்கு லட்சுமி - 94981 06582, கரூர் கார்த்திகா - 94981 61860, பெரம்பலூர் கார்த்திகாயினி - 94875 56866, அரியலூர் சுமதி - 94981 10774 ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவின் ஆய்வாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்

கடைகளில் யாரேனும் எலி மருந்து வாங்கினால், கடைக்காரர்கள் உடனடியாக தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களுக்கோ அல்லது அவரால் நடத்தப்படும் குழு வுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க முடியாதபட்சத்தில் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகங்களை திருச்சிக்கு 0431-2333629, புதுக்கோட்டைக்கு 04322-255299, பெரம்பலூருக்கு 04328-224962, அரியலூருக்கு 04329-222106 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

அதைத் தொடர்ந்து தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார், எலி மருந்து வாங்கிச் சென்றவர்களைத் தொடர்புகொண்டு, காரணத்தை அறிந்து, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவி செய்வர்"

என  தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட மனித நேய செயலில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி

0 comments: