Wednesday, January 13, 2021
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் அதிமுகவினர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி வடக்கு மாவட்டத்தில் அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாகவும்,மரியாதை குறைவாகவும் கேலி கிண்டல் செய்து பேசியிருந்தார்.இச் செயலை கண்டிக்கும் விதமாக முசிறி கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில்,முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி அண்ணாவி முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கவேல் ரத்தினவேல் மல்லிகா இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது உதயநிதிஸ்டாலின் பேசியதை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு போக்குவரத்து மந்திரி, கலெக்டர் நலத்திட்டத்தை வழங்கி செய்தி
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பர...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி த...
-
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா பல்லடம் அட...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment