Sunday, April 04, 2021

On Sunday, April 04, 2021 by Tamilnewstv   

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யுவராஜன் போட்டியிடுகிறார். இவர் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த வகையில் இன்று துறையூர் நகரப்பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். அவருடன் மக்கள் நீதி மய்ய துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், ஸ்ரீபதி, துறையூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், வார்டு செயலாளர் மகேந்திரன், உறுப்பினர்கள் கோபிநாத், ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது யுவராஜன் கூறுகையில், துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்னேரி நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று பல தேர்தல்களில் வேட்பாளரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். 


அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இதுவரை ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் பணியாக இந்த ஏரி  தூர்வாரப்படும்.

பின்னர் அதில் தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக வைரி செட்டிபாளையத்தில் உள்ள ஜம்மேரி தூர்வாரப்படாமல் உள்ளது. துறையூரில் உள்ள ஏரிகளுக்கு இது தாய் ஏரியாகும். நான் வெற்றி பெற்றால் இந்த ஏரியையும் சுத்தம் செய்து நீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறையூர் பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சுத்தமான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருவத்தூர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவு நீர் கால்வாய் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அசுத்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. பல கிராமங்கள் 60, 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலேயே தற்போதும் உள்ளன. அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

0 comments: