Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts
Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts

Friday, August 22, 2014

On Friday, August 22, 2014 by Anonymous in    
புதுடெல்லி
2013–ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
அதிர்ச்சி தகவல்கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி தெற்கு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைதானபோது அதில் 16 வயது சிறுவன் ஒருவனும் இருந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அளவில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான பதிவுகளை சேரிக்கும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் சிறுவயது குற்றவாளிகள் குறித்து மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை நேற்று வெளியிட்டது.
அதில் கடந்த 2013–ம் ஆண்டில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களில் சிறுவர்களின் சதவீதம் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.
கற்பழிப்பு குற்றங்களில் சிறுவர்கள்கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சதவீதம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்செயலில் ஈடுபட்ட சிறுவர்களின் சதவீதம் 132.3 ஆகும். இதேபோல் பெண்களை மானபங்கப்படுத்திய சிறுவர்களின் சதவீதம் 70.5. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட சிறுவர்கள் சதவீதம் 60.3.
ஒட்டுமொத்தமாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கைதான சிறுவர்களின் சதவீதம் 66.3 ஆகும். இவர்கள் அனைவருமே 16 முதல் 18 வயது கொண்டவர்கள் ஆவர்.
31 ஆயிரம் பேர் மீது கிரிமினல் வழக்குகடந்த ஆண்டு நாடு முழுவதும் குற்றச்செயல்களில் தொடர்பு கொண்டிருந்ததாக 31 ஆயிரத்து 725 சிறுவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது கடந்த 2012–ம் ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது 27 ஆயிரத்து 936 கிரிமினல் வழக்குகளே சிறுவர்கள் மீது பதிவாகி இருந்தது.
2013–ல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 7,969 சிறுவர்களும், தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தியாக 6,043 சிறுவர்களும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச்செயல்களில் 40.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
43 ஆயிரம் பேர் கைதுகடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 43 ஆயிரத்து 506 சிறுவர்கள் கைதானார்கள். இவர்களில் 8,392 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 13 ஆயிரத்து 984 பேர் ஆரம்பக் கல்வி வரை படித்தவர்கள். இந்த 2 பிரிவுகளிலும் மட்டும் 51.9 சதவீத சிறுவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
மேலும், இவர்களில் 50.2 சதவீத சிறுவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தின் ஆண்டு வருமானமே ரூ.25 ஆயிரம்தான்.
மேலும் பெற்றோருடன் வசித்துக்கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 35 ஆயிரத்து 244 சிறுவர்கள் கைதாகி உள்ளனர். இது 2013–ல் நாடு முழுவதும் கைதான மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையில் 81 சதவீதம் ஆகும்.
மேற்கண்டவாறு தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
மேனகா காந்தி வலியுறுத்தல்கற்பழிப்பு, பெண்களை மானபங்கப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை, சிறுவர்களாக கருதாமல் இளம் குற்றவாளிகளாக கருதி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.