Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts
Showing posts with label குற்றப்பிரிவு. Show all posts

Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , , ,    
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில்  சக்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறிய கோபுர கலசங்கள் வெண்கலத்தால் ஆனது. இதை குறிவைத்து கொள்ளையர்கள் கோபுர கலசத்தை திருடி சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக கோவில் நிர்வாக கணேசன் கொடுத்த புகாாின் போில் மத்திய பாகம் போலீசார் விசாாித்து வருகின்றனர். 

Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by Unknown in , ,    
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மனைவி தேனம்மாள். இவர்களது மகள் விமலாதேவி (வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் தன்னை யாரும் கடத்த வில்லை என விமலாதேவி போலீசில் தெரிவித்தார்.
அதன்பின்னர் பெற்றோருடன் விமலாதேவி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விமலாதேவி நேற்று முன்தினம் திடீரென இறந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த பெற்றோர் உறவினர்கள் உதவியோடு உடலை எரித்துவிட்டனர்.
இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வம் போலீசில் புகார் செய்தார்.
தாசில்தார் கஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் விமலாதேவி உடல் எரிக்கப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். அவர் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்தாரா? அல்லது கவுரவக்கொலை நடந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விமலா தேவியின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முதல் கட்டமாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாய் தேனம்மாள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடை பெற்று வருகிறது.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பத்து வருடம் சிறை தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.
On Friday, September 05, 2014 by Unknown in , ,    
குழந்தைகள் பாலியல் வன்​கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.

இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்​பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்​தனமாக சீரழித்​துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும் இனி நடந்துடக் கூடாதுங்க. அதுக்காக நான் ஒத்தையா போராடிக்கிட்டு இருக்கேன். எனக்கு மூணு பெண் குழந்தைங்க. இங்கிருக்குற அரசு பள்ளிலதான் படிச்சிட்டிருக்காங்க. போன மாசம் ஊருல காவடி பூஜை நடந்தது. அப்ப என்னோட நடு புள்ளைய பால் பாக்கெட் வாங்க பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்கு அனுப்பி வெச்சேன். பச்ச புள்ள... ஒன்பது வயசுதான் ஆகுது. அந்தப் புள்ளையை போய் கெடுத்து சீரழிச்சிட்டான் அந்தப் பாவி''  என நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறுகிறார் அவர்.
தொடர்ந்து பேசிய சிறுமியின் தந்தை பெருமாள், ''ஜூஸ்ல மயக்க மருந்து கொடுத்து பிஞ்சு குழந்தையின்னுகூட பார்க்காம நாசம் பண்ணியிருக்கான். நடந்தத வெளியே சொன்னினா உன்ன கொன்னுடுவேன்னு மிரட்டியிருக்கான். வீட்டுல சொல்ல பயந்துகிட்டு குழந்தையும் எதுவும் சொல்லாம இருந்திருக்கு. எப்போதும் துறுதுறுன்னு விளையாடிட்டு இருந்தவ அமைதியா இருந்திருக்கா. இத பத்தி இன்னொரு குழந்தைக்கிட்ட  அவ பேசிட்டிருக்கும்போதுதான் எங்களுக்கே தெரிஞ்சது. உடனே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போனப்பதான் குழந்தையோட பிறப்புறுப்பு வீங்கிப் போயிருக்குனு டாக்டருங்க சொன்னாங்க. மனசே வெடிச்சுப் போச்சுங்க. போலீஸ்ல புகார் கொடுக்க போனா, சாதாரண பிரிவுல ஆறுமுகம் மேல கேஸ் போட்டாங்க. போராட்டம் பண்ணுவோம்னு நாங்க எச்சரிச்ச அப்புறம்தான் இன்னும் கூடுதலான பிரிவுகளில் வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க. என் புள்ளைய மட்டுமில்ல, இதே கிராமத்தை சேர்ந்த இன்னும் மூணு பிள்ளைங்களை சீரழிச்சிருக்கான். மானத்துக்கு பயந்துகிட்டு அவங்க புகார் கொடுக்க முன்வரமாட்டுறாங்க'' என்றார் கோபத்தோடு.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த லிங்கா ரெட்டிப்பாளையம் கிராமத்தினர், இப்போது ஆறுமுகம் மீது கொடுத்​துள்ள புகாரை வாபஸ் பெறும்படி தொந்தரவு செய்கிறார்களாம். மளிகைக் கடை ஆறுமுகம் மீது கூடுதல் பிரிவுகள் போடப்பட்ட அன்று இரவு 2 மணியளவில் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள ஒருவர் வீட்டை சமூக விரோதிகள் கொளுத்த முயற்சி செய்துள்ளனர்.
''என் புள்ளைக்கு இப்படியொரு சம்​பவம் நடந்துடுச்சு... காப்பாத்துங்கன்னு ஊர் பெரியவங்ககிட்ட போய் நின்னதுக்கு, 'இங்க போ, அங்க போ’ன்னு விரட்டிவிட்டுட்டாங்க. எனக்கு யார் உதவியும் வேணாம்''  என்று உறுதியாக இருக்கிறார்  சிறுமியின் தாய் மீனா.
மளிகைக் கடைக்காரர் ஆறுமுகத்தின் உறவினர்களிடம் பேசினோம்.  ''கிராமத்துல ரெண்டு மளிகைக் கடை வெச்சிருக்கார். அவருக்கே இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கு. அவரா இப்படின்னு அதிர்ச்சியா இருக்கு.  போலீஸ் அவரை கைது செஞ்சு போன அப்புறம் அவங்க மனைவி தற்கொலை முயற்சி பண்ணினாங்க. எப்படியோ காப்பாத்திட்டோம்'' என்றனர்.
காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜிடம் பேசினோம். ''2012-ல் மத்திய அரசு கொண்டு வந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறுமுகம் மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை மிரட்டல் விடுத்தல் என ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சிறப்பு நீதிபதி தலைமையில் வழக்கு நடைபெற உள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஏழு  ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும்'' என்றார்.
வெறிகொண்டவர்கள் திருந்த வேண்டும்!
On Friday, September 05, 2014 by Unknown in , ,    

ஆசை இருக்கலாம். ஆனால், பேராசை கூடவே கூடாது என்பதைச் சொல்லும் பல கதைகளைக் கேட்டுவிட்டோம். பல படங்களையும் பார்த்துவிட்டோம். ஆனாலும் நம்மவர்களுக்கு முதலீடு விஷயத்தில் பேராசை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. விளைவு, கொள்ளை லாபம் என கவர்ச்சி காட்டும் மோசடி நிறுவனங் களின் சதிவலையில் விட்டில் பூச்சிகளாக விழுந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைக்கிறார்கள்.
சஹாரா, சாரதா, இப்போது லேட்டஸ்ட்-ஆக பிஏசிஎல் என்கிற வரிசையில் இன்னொரு நிறுவனமும் சேரத் தயாராகி வருகிறதோ என்ற ஐயம் நம் வாசகர்களுக்கு எழுந்துள்ளது. மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில்  வெகுவேகமாக வளர்ந்து வரும் எம்ஆர்டிடி என சுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ரூரல் டெவலப்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் இந்தியா லிமிடெட் (MADURAI RURAL DEVELOPMENT TRANSFORMATION INDIA LIMITED) நிறுவனம்தான் அது!
‘பொதுமக்களிடமிருந்து கூட்டாக பணத்தைத் திரட்டி முதலீட்டுத் திட்டங்களை  (Collective Investment Scheme) நடத்துவதற்கு நிதிச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான  செபியிடம் அனுமதி வாங்க வேண்டும். செபியிட மிருந்து அனுமதி வாங்காமல் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டினால், அந்த முதலீட்டுக்கு எந்த வகையிலும் அரசிடமிருந்து பாதுகாப்பு பெற முடியாது. இதுபோன்ற கூட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு செயல்படுத்த செபியிடமிருந்து ஒப்புதல் பெறுவது அவசியம் என்பதை பல உத்தரவுகள் மூலம் வலியுறுத்தியுள்ளது. இப்படி இருக்கையில், மதுரையில் உள்ள இந்த எம்ஆர்டிடி நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை வசூலிப்பது சரியா?’’ என மதுரையிலிருந்து நம் வாசகர் ஒருவர் போன் செய்து கேட்டார். இதனையடுத்து, இந்த நிறுவனம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.
23 கிளைகளுடன்...
எம்ஆர்டிடி நிறுவனம் பொதுமக்களிட மிருந்து பணத்தைத் திரட்டுவதோடு, அதற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையையும் டிவிடெண்டாக வழங்கி வருகிறது. சிறு சேமிப்பு கணக்கு, வைப்பு நிதித் திட்டம், தங்க நகைக் கடன், ஃபெனிபிட் ஃபண்ட் திட்டம், பென்சன் திட்டங்கள் என அரசின் சகல அனுமதி களையும் வாங்கி நடத்தும் தேர்ந்த ஒரு நிதி நிறுவனம்போல, இந்த நிறுவனமும் பல திட்டங்களை நடத்தி வருகிறது.
நாம் திரட்டிய விவரங்கள் வகையில் இந்த நிறுவனம் 23 பிரதான கிளைகளுடனும், 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் மையங்களுடனும் இயங்கி வருகிறது. பொதுமக்களை நேரடியாக உறுப்பினராகச் சேர்ப்பதன் மூலம் பணத்தைத் திரட்டுவதுடன், எம்எல்எம் முறையில் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலமும் பணத்தை வசூல் செய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் மதுரை, திருமங்கலம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி என பல ஊர்களிலும் மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி தொடங்கி, திருச்சி, தஞ்சாவூர் என தமிழகத்தின் மையப் பகுதிகளிலும் கிளைகள் அமைத்து எக்கச்சக்கமான பணத்தை மக்களிடமிருந்து திரட்டி வருகிறது.
மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் எதிரில் இருக்கும் எம்ஆர்டிடி அலுவலகத்துக்கு ஒருநாள் காலை நேரத்தில் சென்றோம். ஐம்பது பேர் அமரக்கூடிய ஓர் அறையில் குழுமியிருக்கிறார்கள் மக்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கிடைக்கப்போகும் பயன்கள் என்னென்ன என்பதை வகுப்பறையில் விளக்குவது போல விளக்கிக் கொண்டிருந்தார் களப்பணியாளர் ஒருவர். அவர் பேச்சை கேட்ட வாடிக்கையாளர்கள், கையில் வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு உடனடியாக கவுன்டரில் போய் பணத்தைக் கட்டுகிறார்கள்.
‘என் மகளோட படிப்புக்கு பணம் சேர்க்கிறேன் சார்’, ‘என் மகனோட கல்யாணத்துக்கு பணம் போட்றேங்க’ என ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, கண்கள் நிறைய கலர்கலரான கனவுகளுடன் பணத்தைக் கட்டுகிறார்கள். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பிஏசிஎல் நிறுவனம் பற்றியோ, அந்த நிறுவனம் பற்றி செபி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.
முதலீடு 25,000; வருமானம் 72,000...
சிறு சேமிப்புத் திட்டத்தில் மாதம் 100 ரூபாய் முதல் சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் விபத்துக் காப்பீடு, இயற்கை மரண இழப்பீட்டுத் தொகை, மருத்துவச் செலவு பலன்கள் என பல  சலுகைகளைக் கொட்டுகிறார்கள்.
மூன்று வருட சிறுசேமிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் 100 வீதம் 3 வருடங்களுக்கு கட்டி முடித்ததும்
(36 மாதங்கள்) 37-வது மாதத்திலிருந்து அடுத்த மூன்று வருடங்களுக்கு மாதம் 150 வீதம் 72 மாதங்களுக்குத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் தரப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது அதிவேகமாக விற்பனையாகும் திட்டம் இதுதான். அதாவது, 25 ஆயிரம் பணம் செலுத்தி முதலீட்டாளராக இணைந் தால், மாதம் ரூ.2,000 வீதம் 36 மாதங்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படும் (36x2: 72,000). (மூன்று வருட முடிவில் அசல் திரும்பத் தரப்படமாட்டாது!)
இதுதவிர, குழந்தைகள் பெயரிலான முதலீட்டுத் திட்டங்கள், வைப்பு நிதித் திட்டங்கள் என பல திட்டங்கள் பெயரிலும் பணம் வசூல் செய்யப் படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் கவர்ச்சிகரமாக இருக்கவே, மக்களும் நீ முந்தி, நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு பணத்தைக் கட்டுகிறார்கள்.
இந்த லாபம் சாத்தியமா...
இந்த நிறுவனம் சொல்லும் லாபத்தைத் தருவது சாத்தியமா?
பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடமோ அல்லது செபியிடமோ முறைப்படி பெற்றிருக்கிறதா என்பதை விசாரிக்க இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டோம். நிறுவனத்தின் புரமோட்டர்கள் யாரும் நம்மை சந்திக்கத் தயாராக இல்லை. (இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் யார் என்பதையே படுரகசியமாக வைத்திருக்கிறார்கள்!) என்றாலும் இந்த நிறுவனத்தின் சார்பாக சிலர் நம்மை சந்தித்து, நிறுவனம் பற்றியோ, அதன் திட்டங்கள் பற்றியோ எதுவும் எழுத வேண்டாம் என நம்மிடம் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை நாம் சட்டை செய்யாத நிலையில் வேறு வழியில்லாமல் நாம் கேட்ட கேள்வி களுக்கு பதில் அனுப்பி வைத்தனர். நிறுவனம் தொடர்பாக நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அந்த நிறுவனத்தின் சார்பில் அளித்த பதிலும்
இனி: நம் கேள்விகளும் அவர்களின் பதிலும்...
பொதுமக்களிடமிருந்து முதலீடு களைத் திரட்ட ரிசர்வ் வங்கியிடமிருந்து முறையாக அனுமதி உள்ளதா?
‘‘எமது நிறுவனம் கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 23(1)ன் கீழ் பதியப் பெற்று 10 கோடியை அனுமதிக்கப்பட்ட முதலீடாகக் கொண்டு ரூ.100க்கு  1 பங்கு என்கிற முறையில் எமது நிறுவனத்தில் இணையும் பங்குதாரர்களுக்கு பங்கு பத்திரங்கள் வழங்கி நிறுவனம் மேற்கொள்ளும் தொழில்களுக்கான முதலை திரட்டுகிறது.
இது ஆர்பிஐ சட்ட விதி 45 I bb-ன் படியும் கம்பெனி விதிகள் (Acceptance of Deposits) 1975 பிரிவு 2 (b) ( VII)-ன் படியும் முதலீடு என்கிற பதத்தில் வராது.
பங்குகளை வெளியிட்டு முதல் திரட்டும் செயல்முறைகள் ஆர்பிஐ அல்லாமல் சிஎல்பி (CLB) என்ற கம்பெனி சட்ட வாரியத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. பிரிவு 3 கம்பெனிகள் சட்டம், 1956-ன் கீழ் பதியப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் கீழ் நிர்வகிக்கப்படும்.’’
பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் முதலீடுகளை வைத்து நிறுவனம் என்ன தொழிலை மேற்கொள்கிறது?
‘‘பொதுமக்களிடமிருந்து வாங்குவதாகச் சொல்வதைவிட எனது நிறுவன திட்டங்களில் இணையும் பயனர்களைப் பங்குதாரர்களாக இணைத்து அதன்மூலம் சேகரிக்கப்படும் தொகையினை எமது MOA-ன்படி அனுமதிக்கப்பட்ட தரிசுநில மேம்பாடு, காலிமனை வாங்குதல், விற்றல், தரகு போன்ற தொழில்களில் ஈடுபட்டு லாபமீட்டுகிறது.’’
ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் அதை எந்த வகையில் முதலீட்டாளர் களுக்கு விளக்குகிறீர்கள்?
‘‘நில மேம்பாடு என்கிற வகையில் எங்களுடைய நிலத்தை சீர்செய்து வீட்டுமனைகளாகவும், வீடுகளாகவும், மேம்படுத்தி, வெளிச்சந்தையிலும், எமது பயனர்களிடம் விற்பதன் மூலமும் லாபம் சாத்தியமாகிறது.’’
பொதுமக்களைப் பங்குதாரராகச் சேர்ப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் மாதாமாதம் கொடுக்கப்படும் தொகைக்கு என்ன கணக்கு?
‘‘வட்டி என்ற பேச்சுக்கே எமது நிறுவனத்தில் இடமில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில முகவர்களால் சொல்லப்படும் திட்ட விளக்கமாகும். மாறாக, எமது நிறுவனம் பிரிவு 80 இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-லும் பிரிவு 55 இந்திய கம்பெனிகள் சட்டம் 2013-ன்படியும் அனுமதிக்கப் பட்ட Redeemable preference shares என்ற வகையில் பயனர் செலுத்திய முழுத் தொகையோடு பங்கு ஆதாயத்தையும் சேர்த்து குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்ப அளிக்கும் முறையே ஆகும். முதலில் செலுத்தும் தொகை திட்ட முடிவில்  திருப்பச் செலுத்தப்படு வதில்லை.’’
உங்களது இணையதளத்தில் பொதுமக்களுக்குத் தேவையான விவரங்கள் எதுவும் இல்லையே?
‘‘எங்களது இணையதளத்தைத் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அதிகமாகக் கேட்கப் பட்ட கேள்விகளை ஒருங்கிணைத்து (அனைத்து கேள்விகளுக்கும்) அவற்றுக்குப் பதிலளிக்கும் பணிகள் நிறைவடையும்.’’
நீங்கள் வாங்கி விற்கும் நிலங்கள் குறைவான காலத்திலேயே லாபம் தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வாங்கியுள்ள இடங்கள் என்ன பெயரில் அல்லது யார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?

‘‘எமது நிறுவனம் வழங்கும் அனைத்து நிலங்களும் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்படுகின்றன. இவை அனைத்தும் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாகவே நடைபெறுகிறது’’ என்று விளக்கம் தந்திருந்தனர்.
இந்த நிறுவனம் தந்த விளக்கம் சரியானதுதானா என நன்கு விஷயம் தெரிந்த சில ஆடிட்டர்களிடம் கேட்டோம்.
‘‘இந்திய நிறுவனங்கள் பதிவுச் சட்டம் 1956-ன்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பொதுமக்களிடமிருந்து பங்கு வெளியீடு, கடன் பத்திரம் /பாண்டு வெளியீடு, டெபாசிட் பெறுவது மூலம் நிதி திரட்ட முடியும். எம்ஆர்டிடி நிறுவனம், தாங்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டும் முதலீடு கம்பெனிகள் சட்டம் 1975 (டெபாசிட் திரட்டுதல்) கீழ் வராது என்று சொல்லி இருக்கிறது. மேலும், பொதுக் காப்பீடு தொடர்பான திட்டங்களை ஒப்பந்தப்படி மேற்கொள்வதாகவும் அதற்கு ஏற்ப கமிஷன் பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.
எனினும், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் தொகை, திரும்பக் பெறக்கூடிய முன்னுரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம் திரட்டுவதாகக் கூறுகிறது. கம்பெனிகள் சட்டம் இதை அனுமதிக்கிறது. ஆனால், இதை மறைமுகமாகக் கடன் வாங்குதல் போன்ற ஏமாற்றும் உத்தியாகப் பயன்படுத்தக் கூடாது.
கம்பெனிகள் சட்டத்தின்படி (கம்பெனிகள் சட்டம் 1956 மற்றும் 2013) திரும்பக் பெறக்கூடிய முன்னுரிமை பங்குகளுடைய (Redeemable preference shares) முதலீட்டு தொகையை லாபத்திலிருந்து தரவேண்டும் அல்லது புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் தரவேண்டும். நிறுவனம் முன்னுரிமை பங்குகளுக்கான தொகையைத் தர நிறுவனத்தில் லாபம் இல்லை எனில், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் தரவேண்டும். இதன் பொருள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்தால் எளிதில் பங்குகளை விற்றுக் கொள்ள முடியும். அப்படி இல்லை எனில், மற்றவர்களுக்கு விற்பது கடினம். இதை எந்த அளவுக்கு முதலீட்டாளர் களுக்கு விளக்கி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிறுவனம் முன்னுரிமை பங்குகள் மூலம் எத்தனை நபர்களிடம், எவ்வளவு தொகை முதலீடாகத் திரட்டி யுள்ளது என்பதும் தெரியவில்லை. ஒரு நிறுவனம் தனது மூலதனத்தை அதிகரிக்கப் பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட விரும்பினால், அது ஐபிஓவாகக் கருதப்படும். அது செபியிடம் அனுமதி பெற்றபிறகே மேற்கொள்ள முடியும். இதற்காக செபியிடம் அனுமதி வாங்கவில்லை என்றால் அது கூட்டு முதலீட்டு திட்டமாகவே கருதப்படும். அப்படியான முதலீட்டை செபி தடைசெய்துள்ளது.
இந்த நிறுவனம் அதிகபட்சம் எவ்வளவு தொகை திரட்ட திட்ட மிட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். முன்னுரிமை பங்குகளுக்கான தொகை, அதன் முதிர்வின்போது எந்த நிதி ஆதாரத்திலிருந்து தரப்போகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்.
எனவே, இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது இன்னொரு கலைமகள் சபா, சஹாரா குழுமம் போல மாற வாய்ப்புள்ளது. எனவே, இதில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்’’ என்றார்கள்.
எம்ஆர்டிடி நிறுவனம் பதில்களை சென்னையின் முக்கியமான கம்பெனி செகரட்டரி ஒருவரிடம் காட்டி, விளக்கம் கேட்டோம். ‘‘பொதுவாக, கம்பெனி சட்டப்பிரிவு 3-ன் கீழ்தான் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். 23(1) என்று குறிப்பிட்டுள்ளது, பெயர் மாற்றம் குறித்த சட்டப்பிரிவுதான். மேலும், கம்பெனி சட்டம் 2013-ன்படி இயக்குநர் அல்லாதவரிடம் டெபாசிட் பெற முடியாது. அவ்வாறு பெறும்பட்சத்தில் Acceptance of deposit Rules 2014 பொருந்தும்.
முன்னுரிமை பங்குகள் விற்கும் நிறுவனங்கள், அதற்கான அனுமதிக்கப் பட்ட முதலீடு இல்லாமல் அவற்றை ஏற்க முடியாது. எனவே, இந்த நிறுவனம் குறிப்பிட்ட தகவல்கள் அடிப்படையில்  முதலீடுகளைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்க முடியாது. வசூலிக்கவும் கூடாது’’ என்றார்.
இந்த நிறுவனம் செபியிடம் அனுமதி வாங்கித்தான் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கிறதா என்பதை அறிய செபி நிறுவன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிடாமல் பேசிய செபி அதிகாரிகள், ‘‘பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிக்க இந்த நிறுவனத்துக்கு நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை’’ என்றதோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர். மேலும், இந்த நிறுவனத்தைப் பற்றி செபி விரைவில் விசாரிக்கத் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.
இப்படி ஒரு நிறுவனம் மதுரையில் செயல்படுகிறது என்கிறபோது இதனைத் தடுக்க காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறிய மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளுடன் பேசினோம். பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரிகள்,  ‘‘நீங்கள் சொல்லும் நிறுவனத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். புகார்கள்  வரவில்லை என்றாலும்  அவர்கள் செய்வது ஏமாற்று என்பது மட்டும் தெரிகிறது’’ என்றார்கள்.
ஆகமொத்தத்தில்  இந்த நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களில் பணம் போடுவது ரிஸ்க் என்பது மட்டும் தெரிகிறது.  பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்காமல் இருக்கலாம்!



Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in , ,    


மும்பை,
வேலை வாங்கி தருவதாக கூறி காதலியை விபசார விடுதியில் விற்ற வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மும்பை அழைத்து வந்ததும் அம்பலமானது.
இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது பெற்றோர் வறுமையில் வாடியதால் வேலை தேடி நாசிக் வந்தார். பின்னர், நாசிக்கில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்தநிலையில், அவருக்கும் கிரண் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிரண் அந்த இளம்பெண்ணிடம், மும்பையில் எனக்கு தெரிந்த வசதியான நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தி வேலை வாங்கி தருகிறேன். மேலும், உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
விபசார விடுதியில்... அவரது ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த பெண் தனது காதலன் கிரணுடன் நாசிக்கில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வந்தார். பின்னர், அந்த இளம்பெண்ணை மும்பை கிரண் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சார விடுதிக்கு காதலன் அழைத்து சென்றார். இது பற்றி அறியாத அந்த இளம்பெண் இரவு முழுவதும் அங்கு தங்கினார். மறுநாள் காலை விழித்து பார்த்தபோது கிரணை காணவில்லை.
இதனால் திடுக்கிட்ட அந்த பெண், அங்கு இருந்த மற்ற பெண்களிடம் கேட்டார். அப்போது, உன்னுடன் வந்த வாலிபர் உன்னை இங்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
3 பேர் கைது இந்நிலையில் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரது உதவியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சமூக குற்றத்தடுப்பு போலீசார் அந்த விபச்சார விடுதியில் சோதனை நடத்தி, அங்கு சிக்கி இருந்த அந்த இளம்பெண் உள்பட 3 பெண்களை மீட்டு டோங்கிரி பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த விபச்சார விடுதி நடத்தி வந்த சல்மா சேக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி விபசார விடுதியில் விற்ற அவரது காதலன் கிரணை போலீசார் தேடிவருகிறார்கள்.

Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by farook press in    
CRIME CASES
NON GRAVE THEFT-02
S.
No
P.S. CR. NO. & SEC. OF LAW
D.O / D.R
PLACE OF OCCURRENCE
NAME OF 
COMPLAINANT
PROPERTY LOST / PROPERTY RECOVERY 
NAME’s OF ACCUSED / ARREST PARTICULARS
GIST OF CASE
AVINASHI SUB DIVISION 
1
Cheyur PS.
 Cr. No. 168/14  
 U/s. 379 IPC
IO: SI. Tr.Karthick Thangam
22.08.14 at 
0530 hrs
22.08.14 at  
0645 hrs 
Near Panchayat Motor Room,
Periyakattu Palayam.
Selvaraj (40),
S/o. Bannari,
2/139 Koush Nagar,
Moolakuruba Palayam,
Muriyandam Palayam,
Cheyur.
Tirupur.
9486392397
20 Meters Motor Cable wire
Worth Rs.3,000/- 
1. Goshan @ Sakthivel (25),
S/o. Sangaran,
Mangarasuvalaya Palayam,
Cheyur.
2. Rajan @ Karrupusamy (22), 
S/o. Kandhasamy, 
-Do-
3. Gurusamy (22),  
S/o. Kandhasamy, 
AD colony,
-Do-
Remand 
       In this case, on the day of occurrence, the accused who were committed theft of property from the Soc and they were caught red-handed by complainant and handed over to police.
174 CrPC-04
Sl.
No
PS, Cr.no. & 
Sec. Law
D/O &
D/R /SOC
Complainant
Deceased 
Gist
AVINASHI SUB DIVISION
1
Perumanallur PS Cr.No. 233/14 
U/s. 174 Cr.PC (Poison)
IO: Inspr. 
Tr. Elango, Perumanallur PS
19.08.14 at 1700 hrs
22.08.14 at 0600 hrs
Deceased’s house. 
Baskaran (31),
S/o. Devarajan,           JJ Nagar, Neruperichal, Pooluvapatti, 
Tiruppur.
96296 35699
SC Community 
Devarajan (60),
S/o. Karuppan, 
JJ Nagar, Neruperichal, Pooluvapatti, 
Tiruppur.
SC Community 
PM Completed 
          In this case, the deceased is father of the complainant and he was suffering by Kidney problem for the past 2 years. Due to this he got dejection in his life, on the day of occurrence he committed suicide by consuming poison and died while undergoing treatment at CMCH, CBE. 
PALLADAM SUB DIVISION
2
Palladam PS
Cr.No. 684/14
U/s. 174 Cr.PC (Poison).
IO: SI Tr.Rajkumar. 
22.08.14 at 2030 hrs
23.08.14 at 0030 hrs
Deceased’s house.
Seetha (30),
W/o. Kumaran,
No.2/225 Arijana Colony,
Ganapathy Palayam,
Palladam.
SC Community
9940992579
Kumaran (34),
S/o. Palani,
No.2/225 Arijana Colony,
Ganapathy Palayam,
Palladam.
PM Not Completed 
       In this case, the deceased is husband of the complainant and he was a drunkard and picked quarrel with complainant frequently in drunken mood. In this circumstances on the day of occurrence, he committed suicide by consuming poison. 
UDUMALPET SUB DIVISION
3
Udumalpet PS
Cr.No. 578/14
U/s. 174 Cr.PC 
IO: Inspr
Tr. Thavamani
22.08.14 at 1300 hrs
22.08.14 at 1330 hrs
Vidyasagar College,
Udumalpet.
Sivakumar (37),
S/o. Subramaniam,
No.108 A Ponneri,
Udumalpet.
Naicker
9698893560
Deepa (14),
D/o. Sivakumar,
No.108 A Ponneri,
Udumalpet.
PM Completed 
         In this case, the deceased is daughter of the complainant and she was studying 8th std in Govt. Girls Higher Secondary School at Udumalpet. Today she went to Vidya sagar college along with her Kabadi team to participate inter school sports meet. During the time of occurrence, while she was playing at the ground, she became unconscious and fell down on the ground and died while on the way to GH, Udumalpet.    
KANGAYAM SUB DIVISION
4
Vellakovil PS
Cr.No. 384/14  U/s.174 Cr.PC (Poison).
IO: Inspr
Tr. Sivakumar. 
21.08.14  at Nigh hours
21.08.14 at 20.15
Complainant’s  house 
Raju (61)
S/o. Thirupathi Muthaliar,
D.NO.368, Semmai road,
Vellakovil.
9442903968
Muthaliyar Community  
Linkeswaran  @ Prabhu (29)
S/o. Raju,
D.NO.368, Semmai road,
Vellakovil.
PM Not Completed 
         In this case, the deceased is son of the complainant. The deceased wife Vishnupriaya expired past 20 days ago. Due to this the deceased got dejection in his life on the day of occurrence he committed suicide by consuming poison and died while undergoing treatment at CMCH, CBE.  
PROHIBITION CASES-02
Sl. 
NO
PS, Crime. & Sec. of Law
D/O
D/R/ 
SOC
Complainant
Accused/
Arrested details
Gist of the case
PEW CASES
1
Dharapuram PEW.
Cr.No. 113/14 
U/s. 4 (1) (k) TNP Act.
22.08.14 at 0930 hrs 
22.08.14 at 1100 hrs 
Petty Shop,
Near TASMAC Shop,
Mettukudi.
Tr. SSI Murugan, 
PEW Dharapuram
Mayilsamy (36), 
S/o. Palanisamy, 
1/36, Thumpala patti, Kundadam, 
Tiruppur.   
Bail 
        In this case accused was allowed to consume the liquor in his petty shop without any valid permit. 100 ML Honey bee Brandy seized. 
2
Dharapuram PEW.
Cr.No. 114/14 
U/s. 4 (1) (a) TNP Act
22.08.14 at 1500 hrs 
22.08.14 at 1700 hrs 
Madathukulam Check post
Tr. SSI Murugan, 
PEW Dharapuram
Kannan (46), 
S/o. Kamatchi, 
Royal Pegri, 
Alangiyam, 
Tiruppur. 
Bail 
        In this case accused was carrying the 180 ml x 6 bottles of IMFL in his travel bag for selling purpose. 180 ML Top Star 6 Bottles seized. 
ACCIDENT CASE
(i). FATAL ACCIDENT CASES -01 DIED-01 INJURED – NIL 
S
N
PS, Cr. No. & 
Sec. of Law
D/O
D/R
SOC
Complainant
No. of Deceased & Injured
Vehicle 
Involved
Accused
Arrest  Details
Gist of the case
AVINASHI SUB DIVISION
1
Perumanallur PS
Cr.No. 234/14
U/s. 279, 304(A) IPC 
(Hit & Run) 
IO: Inspr
Tr. Elango.
22.08.14 at 0500 hrs
22.08.14 at 0630 hrs
Near Muniyappan Kovil,
Moiyandam Palayam,
Kunnathur Road.
Senthilkumar (27), 
S/o. Subramaniam, VAO, Ettiveeram Palayam, Perumanallur, Tiruppur.
Deceased-01
An Unknown male body aged about 50 Years.
Pedestrian. 

Unknown vehicle 
Vs
Pedestrian.
Not Known 
          In this case, during the time of occurrence an unknown accused drove the unknown vehicle in rash and negligent manner and hit on the pedestrian, while walking at the Soc and caused death at the spot. Hence the complainant lodged a complainant for necessary action.

 

(ii). NON FATAL ACCIDENT CASES-05 INJURED-08 
S
N
PS, Cr. No. & 
Sec. of Law
D/O
D/R /SOC
Complainant/ No. of Injured
Vehicle 
Involved
Accused/ Arrest  Details
  Gist of the case
AVINASHI SUB DIVISION
1
Avinashi PS  
Cr No 343/14 
U/s. 279, 337 IPC
   
IO: SI Tr.Vijayabaskar,     Avinashi PS. 
21.08.14 at 1730 hrs
22.08.14 at 1800 hrs
Opp SP Apperals, Thekkalur, 
Avinashi to Coimbatore Road.
Sukumar (19), 
S/o. Balasubramaniyam, 7/147, ASM Colony, Angeripalayam, Tiruppur.
Cell-Nil-
Injured-01
Complainant
Passenger of the Bus 
IP at KCMH, CBE. 
KMS Private Bus  TN 39 BD 0919
Vs
Passenger 
Driver of KMS Private Bus  TN 39 BD 0919
Not Arrest 
        In this case, on the day of occurrence when the accused drove the KMS Private Bus TN 39 BD 0919 in rash and negligent manner, the complainant fell down from the bus and sustained injuries. Injured is IP at KCMH, CBE. 
PALLADAM SUB DIVISION
2
Palladam PS 
Cr.No. 682/14                                                                                                                  
U/s.  279, 337 IPC 

IO: SI Tr. Dhandayutha Pani. 
21.08.14 at 0845 hrs, 
22.08.14 at 1700 hrs, 
Near Karaiyan Pudhur Pirivu,
Palladam to Mangalam road. 
Ranganathan(39), 
S/o. Kittappan
3/832,Thiruvalluvar Nagar,
Ammapalayam road,
Palladam.  
9842346923
Injured-02
1). Complainant,
Rider of TVS XL
IP at Revathy hospital, Tiruppur.
2). Paramesh
Wari (21),
Pillion Rider of Appachi M/C.
IP at KMCH, CBE. 
Apachi TN 47 X 2121
VS
TVS XL Super TN 39 AB 0770

Rider of Apachi TN 47 X 2121
IP at KMCH, CBE. 
       In this case, on the day of occurrence, the accused rode his Apachi TN 47 X 2121 in rash and negligent manner and hit against the TVS XL Super TN 39 AB 0770
and caused injuries to the complainant and pillion rider of his M/C. Injured are IP at  various hospital.
3
Palladam PS 
Cr.No. 683/14                                                                                                                  
U/s. 279, 337  IPC 

IO: SI  
Tr. Rajakumar, 
Palladam  PS.
22.08.14 at 0545 hrs, 
22.08.14 at 1900 hrs, 
Near Perumapali Bus stop, 
Kovai to Trichy main road. 
Saravanan (33), S/o. Palanisamy, Semmipalayam, Chinnasamy thottam,
Palaldam.
      
Injured-01
Palanisamy (56), 
S/o. Ponnayan, Chinnasamy thottam, 
Semmipalayam, Palladam. 
Pedestrian.
IP at CMCH, CBE.
Swift Car TN 37 CE 6106 
Vs
Pedestrian
Driver of  Swift Car TN 37 CE 6106 
Not Arrest 
        In this case, on the day of occurrence, the accused drove the Swift Car TN 37 CE 6106 in rash and negligent manner and hit on the Pedestrian, while walking at the Soc and caused injuries to the Pedestrian. Injured is IP at CMCH, CBE.
4
 Mangalam PS  Cr.No. 303/14 
U/s. 279, 337 IPC 
IO: SI Tr. Tagoore.
20.08.147 at 0930 hrs

22.08.14 at 1415 hrs 
Near Perumagounden palayam Pirivu,
Karanam pettai to Somanur road. 
Thanagaraj (33), S/o.  Velusamy,
5/261 Karadivavi, Palladam.

9842783301
Injured-03
1). Karuppusamy, S/o. Rangasamy,
 –Do-
(Rider of M/C).
2). Vishnu piriya, 
W/o. Thangaraj,
–Do-
(Pillion Rider of M/C).
3). Susmitha, 
D/o. Thangaraj 
–Do-
(Pillion Rider of M/C).
IP at Muthus Hospital, Coimbatore. 
Sunny Nissan  Car TN 37 CZ  2021               
Vs
Honda Pleasure 
TN  39 AX 8719  
Driver of Sunny Nissan  Car TN 37 CZ  2021  
Not Arrest             
         In this case, on the day of occurrence the accused drove the Sunny Nissan Car TN 37 CZ  2021 in rash and negligent manner and hit against the Honda Pleasure TN  39 AX 8719 and caused injuries to the rider and pillion riders of M/C. Injured are IP at Muthus hospital, Coimbatore.  
KANGAYAM SUB DIVISION
5
Uthukuli PS.
Cr.No. 290/14 
U/s. 279, 337 IPC
IO: WSI 
Tmt. Gomathi 
               
21.08.14 at 2030 hrs
22.08.14 at 1400 hrs
Near Reddipalayam Water Tank, Uthukuli to Vijayamanagalm Road. 
Sundharesan (53),
S/o. Periyasamy, 
Gurukal
83, Meala goundan Palayam, 
Uthukuli.

9943088779
Injured-01
Balachandhar (42),
S/o. Ramasamy,
Meala goundan Palayam,
Uthukuli.
Rider of M/C.
IP at Malar Priya hospital, Tiruppur.
TNSTC Govt. Bus TN 38 N 1797
Vs
TVS  Vego TN 56 D 8794
Driver of TNSTC Govt. Bus TN 38 N 1797
Not Arrest 
         In this case, on the day of occurrence, the accused drove the TNSTC Govt. Bus TN 38 N 1797 in rash and negligent manner and hit against the TVS Vego TN 56 D 8794 and caused injuries to the rider of M/C. Injured is IP at Malar Priya hospital, Tiruppur.