Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in , ,    


மும்பை,
வேலை வாங்கி தருவதாக கூறி காதலியை விபசார விடுதியில் விற்ற வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மும்பை அழைத்து வந்ததும் அம்பலமானது.
இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது பெற்றோர் வறுமையில் வாடியதால் வேலை தேடி நாசிக் வந்தார். பின்னர், நாசிக்கில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்தநிலையில், அவருக்கும் கிரண் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிரண் அந்த இளம்பெண்ணிடம், மும்பையில் எனக்கு தெரிந்த வசதியான நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தி வேலை வாங்கி தருகிறேன். மேலும், உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
விபசார விடுதியில்... அவரது ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த பெண் தனது காதலன் கிரணுடன் நாசிக்கில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வந்தார். பின்னர், அந்த இளம்பெண்ணை மும்பை கிரண் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சார விடுதிக்கு காதலன் அழைத்து சென்றார். இது பற்றி அறியாத அந்த இளம்பெண் இரவு முழுவதும் அங்கு தங்கினார். மறுநாள் காலை விழித்து பார்த்தபோது கிரணை காணவில்லை.
இதனால் திடுக்கிட்ட அந்த பெண், அங்கு இருந்த மற்ற பெண்களிடம் கேட்டார். அப்போது, உன்னுடன் வந்த வாலிபர் உன்னை இங்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
3 பேர் கைது இந்நிலையில் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரது உதவியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சமூக குற்றத்தடுப்பு போலீசார் அந்த விபச்சார விடுதியில் சோதனை நடத்தி, அங்கு சிக்கி இருந்த அந்த இளம்பெண் உள்பட 3 பெண்களை மீட்டு டோங்கிரி பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த விபச்சார விடுதி நடத்தி வந்த சல்மா சேக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி விபசார விடுதியில் விற்ற அவரது காதலன் கிரணை போலீசார் தேடிவருகிறார்கள்.

0 comments: