Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா: 29–ந்தேதி தொடங்குகிறது
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா வரும் 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
அதன்பின் தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், 11 மணிக்கும் தமிழில் திருப்பலி, குணமளிக்கம் வழிபாடு, மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருட்சாதனமும், 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். மேலும் மறையுரை கருத்துக்களும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு தந்தைகள், ஆன்மீக குருக்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் முக்கிய விழா செப்டம்பர் 8–ந்தேதி (திங்கட்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 139–வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 14–வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலை 4மணிக்கு நற்கருணை ஆராதனையும், 5 மணிக்கு முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலியும், இரவு 7மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. 9–ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 6.30 அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இதன் ஏற்பாடுகளை பங்கு தந்தை திருத்தல அதிபர் பிளேஸ்அடிகளார், திருத்தலநிர்வாகி ஆரோக்கியசாமி அடிகளார், உதவி பங்குதந்தை வளன்அடிகளார், ஆன்மீககுரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

0 comments: