Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
மேலூர். ஆக.25
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments: