Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
சேடப்பட்டியை சேர்ந்தவர் ராம்காளை. இவரது மகன் பச்சைப்பாண்டி (வயது14). இவன் திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். விடுதியில் தங்கி இருந்த பச்சைப்பாண்டி கடந்த 10–ந்தேதி திடீரென மாயமானான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

0 comments: