Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in , ,    
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு பத்து வருடம் சிறை தண்டனை அளித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் சங்கர். கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் தன்னுடன் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு என்பவரின் பதினைந்து வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றவாளியான சங்கருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் திலகவதி தீர்ப்பளித்தார்.

0 comments: