Showing posts with label kereala. Show all posts
Showing posts with label kereala. Show all posts

Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
கொழிஞ்சாம்பாறை, செப். 13–
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சுரேசுக்கு லாரியில் எரிசாராயம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி அதிகாரிகளான சதீஸ், முரளிதரன், சஞ்சீவ் மற்றும் போலீசாருடன் குழல்மன்னம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவலத்துக்கு ஒரு லாரி வந்தது. லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதும் லாரி நின்றது.
அதிரடியாக சென்று பார்த்தபோது லாரியில் எந்த பாரமும் இல்லாமல் காலியாக இருந்தது. எனினும் டிரைவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. லாரியை ஓரங்கட்டி அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது டீசல் டேங்க் அருகே ரகசிய அறை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரகசிய அறையை சோதனை செய்ததில் 1000 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த அங்கமாளியை சேர்ந்த டிரைவர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.
அதில் வேலந்தாவலம் வழியாக இதுவரை 98 முறை எரிசாராயம் கடத்தியுள்ளோம். கடத்தலுக்கு சில அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்தனர். கோவையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் இன்னும் 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளோம். கேரளாவில் மதுபார்கள் மூடப்படுவதையொட்டி இருப்பு உள்ள அனைத்து சரக்குகளையும் கடத்தி பணமாக்க முயன்றோம் என்று கூறினார்.
இது குறித்து மதுவிலக்கு அதிகாரி சுரேஷ் தலைமையில் எரிசாராயம் கடத்தலுக்கு அதிகாரிகள் துணைபோனார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 1000 லிட்டர் எரிசாராயத்தின் மதிப்பு ரூ.50 லட்சம். இன்னும் கோவையில் பதுக்கியுள்ள 70 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மீட்பது குறித்தும், அதை பதுக்கியவர்கள் குறித்தும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.