Showing posts with label mumbai. Show all posts
Showing posts with label mumbai. Show all posts

Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
கோப்புப் படம்
கோப்புப் படம்
ஒரு ஊர்ல... என்று ஆரம்பித்து தினமும் இரவில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கதை சொல்வேன். பெரும்பாலும் வழக்கமான கதைகளைச் சொல்லாமல், நானே சில கதாபாத்திரங்களை உருவாக்கி அப்படியே வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டே போவேன். இடையில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப கதை மாறிக் கொண்டே வரும். கடைசியில் எங்களுக்கு ஓர் அற்புதமான கதை கிடைத்துவிடும். சந்தோஷமாக தூங்கிவிடுவோம். கிட்டத்தட்ட அப்படிப்பட்டதுதான் நம்ம ஊருக்கு ரயில் வந்த கதையும்.
162 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், 1853 ஏப்ரல் 16ந் தேதி, இந்தியாவில் முதல் ரயில் ஓடியது. முக்கிய வியாபார ஸ்தலமான பம்பாயில் இருந்து தானேவுக்கு அந்த ரயில் இயக்கப்பட்டபோது, வருங்கால இந்தியாவை வடிவமைப்பதில் இந்த வாகனம் எந்தளவு பயன்படப் போகிறது என்பதை அங்கிருந்த யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை.
ரயில் என்ற வாகனம் எப்போதிருந்து வரலாற்றின் பக்கங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டே போனபோது, அது என்னை 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டு போய் நிறுத்தியது.
1604-ல் இங்கிலாந்தின் வொலாட்டன் பகுதியில் மரத்தால் தண்டவாளம் அமைத்து, அதன்மீது சில பெட்டிகளை ஒன்றிணைத்து குதிரையைக் கொண்டு இழுத்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெற்றதாக குறிப்புகள் இல்லை. இருப்பினும் இதுதான் ரயில்வே என்ற அமைப்புக்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது.
சரியாக இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, 1804-ல் ரிச்சர்ட் ட்ரெவிதிக் (Richard Trevithick) என்ற பொறியாளர் உலகின் முதல் நீராவி ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார்.
என்ஜின் கிடைத்த பிறகு ரயில் குறித்த பரிசோதனை முயற்சிகள் தீவிரமடைந்தன. 1825-ல் உலகின் முதல் பயணிகள் ரயில் இங்கிலாந்தில் ஓடியது. இல்லை.. இல்லை.. 1830களில்தான் முதல் ரயில் ஓடியது என ஒரு சாரார் கூறுகின்றனர். அது எப்படி இருந்தாலும், இந்தியா அப்போது இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததால் அந்த கண்டுபிடிப்பு இங்கும் வந்தது.
சும்மா ஒன்றும் அவர்கள் இந்தியாவில் ரயிலை இயக்கவில்லை. 1846-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பஞ்சுத் தட்டுபாடு, இங்கிலாந்து வணிகர்களை இந்தியாவை நோக்கி திசைதிருப்பியது. இந்தியாவின் பல பகுதிகளில் மானாவாரியாக பஞ்சு விளைந்தது. அதை எல்லாம் உடனுக்குடன் அருகில் உள்ள துறைமுக நகரங்களுக்கு கொண்டு சென்று இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவின் உட்பகுதியில் விளையும் பஞ்சை துறைமுகப் பகுதிக்கு கொண்டு வரவே பல நாட்கள் ஆனது. இந்த கால விரயத்தை தவிர்க்கத்தான் இங்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது ஆங்கிலேய உயர் அதிகாரியான டல்லவுசி (Lord Dalhousie), இந்தியா முழுவதையும் ரயில் மூலம் இணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். குறிப்பாக பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய துறைமுக நகரங்களை இணைப்பது முக்கியம் என்றார். இதற்காக இந்தியாவின் முதல் ரயில் நிறுவனமான கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனி மசோதா 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா தோல்வியைத் தழுவியது.
இதனிடையே 1848-ல், தனது 36வது வயதில், இந்தியாவின் இளம் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார் டல்லவுசி. அவருக்கு ஏற்கனவே ரயில்வே குறித்த தெளிவான பார்வை இருந்ததால், அவரது முயற்சியால் 1849ஆம் ஆண்டு ரயில்வே மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.
கிழக்கிந்திய கம்பெனிக்கும், கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனிக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ரயில்வே லைன் அமைக்க ரயில்வே கம்பெனி 5 லட்சம் பவுண்டுகளை முதலீடு செய்யும் என்றும், பின்னர் விரிவாக்கம் செய்யும்போது, இதனை 10 லட்சம் பவுண்டுகள் வரை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. இதன் அடிப்படையில் 1852, நவம்பர் மாதம் பம்பாய் – தானே இடையிலான ரயில் பாதை தயாரானது.
சோதனை முயற்சிகள் எல்லாம் முடிந்து, 1853 ஏப்ரல் 16-ம் தேதி, சனிக்கிழமை, மதியம் 3.35 மணிக்கு இந்தியாவின் முதல் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. பம்பாயின் போரி பந்தரிலிருந்து தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. 14 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் 400 விருந்தினர்கள் பயணம் செய்தனர். இந்த வரலாற்று நிகழ்வை பொதுமக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புகைவிட்டுக் கொண்டே இரைச்சலுடன் ஓடிய அந்த இரும்பு வாகனத்தை ஏராளமானோர் விழிகள் விரிய வியப்புடன் பார்த்தனர். சிலர் பீதியில் பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறிக்கொண்டு ஓடினர். இந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்தபடி, 75 நிமிடங்களில் வெற்றிகரமாக இலக்கை வந்தடைந்த ரயிலுக்கு தானேவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உண்மையில் இதுவெல்லாம் கல்கத்தாவில் நடந்திருக்க வேண்டியது. காரணம், அப்போது கல்கத்தா தான் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது. கல்கத்தாவில் இருந்து முதல் ரயிலை இயக்க நிறைய முயற்சிகள் நடந்தன.
பம்பாய், ஹவுரா ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து இயக்குவதற்கான ரயில் என்ஜின்களும், பெட்டிகளும் இங்கிலாந்தில் இருந்து ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. கிழக்கிந்திய ரயில்வேக்கான என்ஜினை ஏற்றி வந்த குட்வின் என்ற கப்பல் திசை மாறி ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. ரயில் பெட்டிகளை ஏற்றிவந்த மற்றொரு கப்பல் வங்கக் கடலில் நடுவழியில் கவிழ்ந்துவிட்டது.
இதெல்லாம் போதாதென்று கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி இருப்புப்பாதை அமைக்க விரும்பிய பாதையின் ஒரு பகுதி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் கிழக்கிந்திய ரயில்வேக்கு இடம்தர மறுத்தனர்.
இப்படி விதி நாலாபக்கமும் தலையை நன்றாக விரித்துப் போட்டு ஆடியதில், கிழக்கே போக வேண்டிய ரயில், முதலில் மேற்கே போய்விட்டது. பம்பாய் நகரம் போட்டியில் கல்கத்தாவை மண்ணை கவ்வ வைத்துவிட்டது. பின்னர் ஒருவழியாக ஓராண்டு கழித்து, 1854 ஆகஸ்ட் 15ந் தேதி ஹவுரா – ஹூக்ளி இடையே கிழக்கு இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது.
நம்ம மெட்ராஸ் பக்கம் ரயில் விடும் திட்டம் இதற்கெல்லாம் முன்பே தொடங்கியது. 1845ஆம் ஆண்டே இதற்கென மெட்ராஸ் ரயில்வே கம்பெனி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களால் இந்த வேலை தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பின்னர் ஒரு வழியாக தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி 1853இல் தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம்.
புனித ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் இருந்ததால், ராயபுரத்துக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது. விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையத்தை, மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி திறந்து வைத்தார். ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது.
ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த ரயிலில் பயணித்தனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.
இப்படிதான் ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறி தொடங்கிய இந்திய ரயில்வேயின் பயணம் பின்னர் ராக்கெட் வேகமெடுத்து, இன்று இந்தியா முழுவதும் உள்ளங்கை ரேகைகளைப் போல ரயில் பாதைகள் பின்னிப் பிணைந்து ஓடிக் கொண்டிருக்கின்றன

Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி.
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி.
பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கிவிடப்படும் அவலம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் நகரத்தில் மரத்வாடா கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் வறட்சி நிலவுகிறது. அதன் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் வெகு ஆழத்துக்குச் சென்றுவிட்டது.
சுமார் 60 அடிக்கும் மேலாக ஆழம் உள்ள இந்தக் கிணறுகளில் வாளிகளால் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. எனவே, வாளிகளை இணைத்துள்ள கயிறுகளின் மூலம் குழந்தை களை கிணற்றுக்குள் இறக்கி விடுகிறார்கள்.
கீழே இறங்கிய குழந்தைகள் சில கோப்பைகள் மூலம் தண்ணீரை வாளியில் நிரப்பி மேலே அனுப்புகிறார்கள்.
குழந்தைகள் செல்லும் அந்தக் கயிறு மிக மெல்லிய நைலான் கயிறு ஆகும். எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழலாம் என்ற நிலையில் இருக்கும் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் பள்ளி செல்லும் குழந்தைகள் சாகசப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதுகுறித்து கிணற்றுக்குள் இறங்கும் சிறுமி ஒருவர் கூறும்போது, "இது கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் நிலைமை ஆகும். இந்தக் கிணறுதான் எங்கள் தண்ணீர் தேவைகளுக்கான ஒரே ஆதாரம் ஆகும். இந்தக் கிணற்றில் இறங்கி நீர் எடுப்பதற்காக நான் பல சமயம் பள்ளி வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டியிருக் கிறது" என்றார்.
மரத்வாடாவின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் 300 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதிகளவு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் எடுக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என காரணம் கூறப்படுகிறது. இந்த பாதிப்பை குழந்தைகள்தான் சுமக்க வேண்டியுள்ளது.
இந்த மரத்வாடா கிராமம் மகாராஷ்டிர மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டேவின் தொகுதி ஆகும். இங்கு கோடைக்காலங்களில் நிலவும் அதிகபட்ச வறட்சியைச் சமாளிக்க இதுவரை எந்தத் திட்டங்களும் தீட்டப்படவில்லை. இதுகுறித்து பங்கஜா முண்டே எந்த கருத்தும் கூறவில்லை

Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
மஹாராஷ்டரா மாநிலத்தின் விதர்பா பகுதிகளில், பயிரிழப்பினால் கடந்த 74 மணி நேரத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.


 
தற்கொலை செய்து கொண்டுள்ள அனைத்து விவசாயிகளும் பருத்து உற்பத்தியாளர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். சையது அன்சர் அலி, குஷல் கபசே, புனாஜி மன்வார், சோமேஷர் வதே, மரோதி ரதோட் ஆகிய அனைவரும் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
 
மதுகார் அட்சர், வித்கல் தவ்வதே, மரோதி கோட் என்ற மூன்று பேரும் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
இது குறித்து பேசிய விதர்பா ஜன அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், ”விவசாயிகள் தற்கொலை விதர்பா பகுதிகளில் ஒரு முக்கியப் பிரச்சனை. அரசு இந்த விவகாரம் பற்றி சிந்தித்து, பருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தப்பட்ச விலையை உயர்த்தித் தரவேண்டும்” என்றார்.
 
மேலும், 2014 ஜனவரியில் இருந்து தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்திருப்பதாக திவாரி கூறியுள்ளார்.

Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
மும்பையில் வீரார் பகுதியில் 
பாய் தாகூர் என்பவர் வீட்டிலும்,
அலுவலகத்திலும் வருமான வரித்துறை
யினர் நடத்திய சோதனையில்13000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய
"ரெய்டு" என்று கூறப்படுகிறது...





Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
‘ஜாக்பாட்’ ராகினி, ‘எம்எம்எஸ் 2,’ ஜிசிம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘வடகறி என்ற படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர்களிடம் இவர் ரகசியமாக கண்டிஷன் போட்டு நடிப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கு முன்பு உடன் நடிக்கும் ஹீரோவிடமிருந்து எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ததற்கான டாக்டர் சான்றிதழ் கண்டிப்பாக தரவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.
படத்தில் நடிக்கும்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் வரும். எனவேதான் இந்த சான்றிதழை சன்னி கேட்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். ‘ஜிசிம் 2 படத்தில் அவர் நடித்தபோது அப்படத்தில் நடித்த ரன்தீப் ஹுடா, அருனோதய் சிங் ஆகியோரிடமிருந்து இதுபோன்ற சான்றிதழ் பெற்ற பிறகே நடிக்க சம்மதித்துள்ளா