Tuesday, February 09, 2016

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv   

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 09, 2016 by Tamilnewstv in    

Monday, February 08, 2016

On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி கோயில்களில் கும்பாபிஷேகம் ரூ.3கோடி செலவில் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த அக்டோபரில் தொடங்கிய திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 

இன்று கும்பாபிஷேக திருப்பணி அலுவலகத்தை இன்று தொழிலதிபர் ஏ.வி.எம்.வி.மணி திறந்துவைத்தார். அச்சமயம் அர்ச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பணிக்குழுத் தலைவர் பி.எஸ்.எஸ்.கே.ராஜா சங்கரலிங்கம், செயலாளர் பி.விநாயகமூர்த்தி, கமிட்டி பொருளாளர் ரமேஷ், உறுப்பினர்கள் பாஸ்கர்,ஆறுமுகம்,கமலஹாசன்,கோவில் பிரதான அர்ச்சகர் செல்வம் பட்டர், அலுவலர்கள்,பக்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
On Monday, February 08, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி பூபாலராய புரத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தியது.

பின்னர் அந்த கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. வெகுநேரமாக போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் துப்பு துலக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Sunday, February 07, 2016

On Sunday, February 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.2.16
ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி;ற்சியாளர் சிவகுமார் தலைமையில் தெப்பகுளம் பிஷப் பள்ளியில் நடைபெற்ற யோக போட்டியில் கலந்து கொண்டனர்
அப்பொழுது சுஜாத சௌமியா ரம்ய பிரீதாலெட்சுமி ஸ்ரீநிதி  ஆதித்யா ஜீவதங்கம் கஸ்வவின் முருகேஷ் ஆகியேர் யோகா செய்தனர்.
On Sunday, February 07, 2016 by Tamilnewstv in    
திருச்சி 7.2.16
திருச்சி மாவட்ட அஇஅதமுக சார்பில் 54 வார்டு அருகில் பேருந்து நிலையத்தை மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் கோட்ட தலைவர் ஞனசேகர்  ஆகியோர் உடனிருந்தனர் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.
On Sunday, February 07, 2016 by Tamilnewstv in