Wednesday, August 27, 2014
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.
செவ்வாயன்று காலை கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கே.தங்கவேல் எம்.எல்.ஏ., சென்றார். அங்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சத்தில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பறை கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார். அப்போது மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னு, தலைமை ஆசிரியர் என்.உமாசாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இப்பள்ளியில் மொத்தம் 431 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் தேவையாக இருப்பதால் இந்த பள்ளிக்கும், மண்ணரையில் உள்ள பள்ளிக்கும் தலா 3 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் கே.தங்கவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கருமாரம்பாளையம் நியாயவிலைக் கடையை அவர் பார்வையிட்டார். அங்கிருந்த விற்பனையாளரிடமும், பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்களிடமும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்வது குறித்து கேட்டறிந்தார்.
கருமாரம்பாளையம் பள்ளி மற்றும் நியாயவிலை கடைகளை பார்வையிட்டபோது மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சுரேந்திரன், கிளை உறுப்பினர்கள் எம்.லட்சுமணன், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து கருவம்பாளையம் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது மாமன்ற உறுப்பினர் சந்திரா பழனிசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ச.பழனிசாமி, ஜி.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் லெனின்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன் பிறகு, கேவிஆர் நகர் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் பணியை அவர் பார்வையிட்டர். மாநகராட்சி உதவிப் பொறியாளர் முனியாண்டியிடம் இந்த பணி விபரம் குறித்து கேட்டறிந்தார்.
----------
(சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்ட படங்கள்)
வெடத்தலாங்காடு அங்கன்வாடி, கருமாரம்பாளையம் நியாயவிலைக்கடை, கருமாரம்பாளையம் பள்ளிக்கூடம், கேவிஆர் நகர் சமுதாயக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment