Friday, November 14, 2014
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித்தலை அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகே உள்ளது இரட்டை வாய்க்கால். இந்த வாய்க்காலுக்கு மாயனூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மிகவும் குறுகிய அளவில் உள்ள இந்த பாலம் இவ்வழியாகத்தான் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி செல்லாமல் பெரம்பலூரில் இருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்று மதுரை சாலையில் இணைகிறது. இதனால் 50 கிமீ குறையும். இதனால் குளித் தலை வழியாக தினமும் ஏரா ள மான சரக்கு லாரிகள், கார்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.மேலும் குளித்தலையில் இருந்து தோகைமலை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, கடவூர், தரகம்பட்டி வரை அரசு மற் றும் தனியார் பஸ்கள் ஏரா ளமாக செல்கின்றன.மேலும் குளித்தலை முசிறியில் இருந் து அய்யர்மலை, பஞ்சப்ப ட்டி, வளையப்பட்டி, கள் ளை, தோகைமலை, திருமகவுண்டனூர், கொசூர் ஆகிய ஊர்களுக்கு டவுன்பஸ்களும்,தனியார் பள்ளி வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் இந்த பால கைப்பிடிச் சுவர்கள் இடிந்து விழுந்து கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் பாதுகாப்பின்றி எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் இரும்புக்கம்பிகள் அமைத்து சீரமைத்து ள்ளனர். இந்நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
0 comments:
Post a Comment