Sunday, November 09, 2014
கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம் கரூர் மாவட்டத்தில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக, ஏழு சினிமா தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக, கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது.கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர், துணைதாசில்தார் அடங்கிய குழுவினர், கரூர் நகர் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், சோதனை மேற்கொண்டனர். கரூர் நகரில், நான்கு தியேட்டர்களில், 25 ரூபாய் டிக்கெட்டை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல், குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ், தலைமையிலான குழுவினர் குளித்தலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சோதனை செய்ததில், மூன்று தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
சபரிநாதன் 9443086297 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக திருச்சியில் வேலை...
-
*திருச்சி *உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என மாநிலத்தலைவர் ...
-
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டி...
0 comments:
Post a Comment