Wednesday, March 25, 2020
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி யில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளர் கேஎன் . நேரு அவர்கள் கொரோனா நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக தொகுதி மக்களுக்கு 2500 மாஸ்க்,சோப்பு, கை சுத்தம் செய்யும் திரவம் (சேனிடைசர்) ஆகியவற்றை
மாநகர மற்றும் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்
மாநகர மற்றும் பகுதி செயலாளர்களிடம் கொடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன், தமிழ்நாடு மாநில, மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன், அந்தநல்லூர் துரைராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மக்களை பெரும் துயரிலும் சிரமத்திலும் உடல் மற்றும் மன உளைச்சலிலும் ஆட்படுத்தியிருக்கும்
வரலாறு காணாத கொடுமையான தொற்று கிருமியாம் கோரோனா கிருமி பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் (வெண்டிலேட்டர், முக கவசம், Hand Sanitizer) போன்ற நோய் தடுப்பு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துமனைகளில் வாங்கிடும் விதத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ₹10 லட்சம் வீதம் திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு திருச்சி கிழக்கு மேற்கு , திருவரம்பூர், திருவரங்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ₹40 லட்சமும் புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் ₹20 லட்சமும் ஆக மொத்தம் ₹60 லட்சம் திருச்சி , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதல்கட்டமாக வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது அண்ணா சிலை வழியாக பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்கள் மற்றும் பல ஊர்களில் இருசக்கர வாகனங்கள் வழியாக வரும் நபர்கள் எல்லாம் அந்த வழியாக வந்து செல்ல வேண்டும்
திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு , ஆனந்த் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் தனது போக்குவரத்து பணியின் இடையே பொதுமக்களுக்ககு கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த (sanitizer) சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மக்களைகொரானா வைரஸ்இருந்து காப்பாற்றும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பணியில் போக்குவரத்துக் காவல்துறையினர்
திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு , ஆனந்த் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் தனது போக்குவரத்து பணியின் இடையே பொதுமக்களுக்ககு கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த (sanitizer) சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி முழு அளவில் தெளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை மக்கள் அதிக அளவில் காய்கறி வாங்குவதற்காக கூடிவிட்டனர். பின்னர் காவல் துறையினர் மூலம் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மட்டுமே வந்து காய்கறி வாங்கி செல்ல வேண்டும். மக்கள் வரக்கூடாது. அதே போல் இன்று காலை திறக்கப்பட்ட டீக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து காவல் துறை மூலம் 7 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பால் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் மக்கள் அதிக அளவில் கூட கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். அதனால் மக்கள் பதற்றமின்றி அதை வாங்கி வைக்க வேண்டுமென்று தீவிரம் காட்டக்கூடாது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் வரக்கூடாது. அவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோயை கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை. வீட்டிற்குள் இருந்தால் இந்த நோய் வராது. திருச்சி அரசு மருத்துவமனையில் 11 பேர் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டது. அதில் கரோனா இல்லை. மீதமுள்ள ஐந்து பேரும் சாதாரண சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கரோனாவுக்கான ரத்த பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது.
அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள். மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள். மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
On Wednesday, March 25, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு 24.3.20 செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது. வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி:
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற போலி மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்கள் காரணமாக இந்நிறுவனம் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக அழகர்சாமி என்கிற ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் ஆகியோர் அறம் மக்கள் நல சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இச்சங்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை செய்து வருகின்றனர். எல்பின் நிறுவனம் மூலம் மோசடியாக சுருட்டப்பட்ட நிதியை இச்சங்கம் மூலம் செலவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வகையில் எல்பின் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் 400 மேற்பட்ட பேர் துபாய் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 400 மேற்பட்ட பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த 3 ஆம் தேதி துபாய் சென்றனர் பின்னர் 9, ஆம் தேதிகளில் துபாயிலிருந்து திரும்பினர். அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு சமீபத்தில் நாடு திரும்பினர். இவர்கள் புறப்பட்டு சென்றது முதலே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. துபாய் சென்று வந்த இந்த 400 மேற்பட்ட பேருக்கும் இதுவரை கொரோனா குறித்த பரிசோதனை நடைபெறவில்லை. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் மூலமாக தான் இந்தியாவிற்குள், குறிப்பாக தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையம், கோவை, மதுரை விமான நிலையங்கள் வழியாக வந்த பயணிகளின் விவரங்களை தமிழக அரசு சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த எல்பின் நிறுவனம் மூலம் துபாய் சென்று திரும்பியவர்கள் இதர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி தற்போது தமிழகத்திற்குள் வந்துள்ளனர். இவர்கள் யாரும் இதுவரை கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்குவதாக அவர்கள் நடத்தும் அறம் டிவி.யில் செய்தி வெளியாகியுள்ளது. தெரு ஓரம் வசிக்கும் மக்களை தேடிச்சென்று உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
( முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் கையுறை அணியாமல் உணவு துபாய் சென்று வந்த எஸ்ஆர்கே ரமேஷ்குமார் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைக்காமல் உணவு பரிமாறுகின்றனர்)
( அழகர்சாமி என்கிற ராஜா எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் 400 நபர்கள் இவர்கள் தொடர்பில் உள்ள நபர்களை வரிசைப்படுத்தி இதனால் வரை யார் யாரிடம் தொடர்பு உள்ளவர்கள் என்று அறிந்து பரிசோதித்து தொற்று பரவாமல் மத்திய அரசு மாநில அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்)
இந்த செய்தியை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்களுக்கும் ட்விட்டர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது
இவர்களினால் இவர்கள் தொடர்பில் உள்ள மற்றும் அவர்கள் தொடர்பில் உள்ள எத்தனை பத்திரிக்கையாளர்கள் ஊடகவியல் நண்பர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
திருச்சி மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதிகள் இன்று முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவில் கொரனவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைச்சாலை உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை கைதிகளை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
சுமார் 800 விசாரணைக் கைதிகளும், 600 தண்டனை கைதிகளும், 200 குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணைக் கைதியாக உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 125 நபர்கள் இன்று முதல் கட்டமாக
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோல பெண்கள் சிறைச்சாலையிலிருந்தும் பெண் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை கைதிகள் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.

நிலவிவரும் கொரானா தொற்று காரணமாக மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் செயலில் வர உள்ள நிலையில் கை சுத்திகரிப்பான் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 100 மிலி கை சுத்திகரிப்பான் சராசரியாக 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்கள் வாங்கி பயன் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறையின் தொழில் முனையமான ஹீபர் ஹைஜீன் என்டர்பிரைசஸ் (HHy) இன்று கல்லூரியின் 14 தத்து கிராமங்களில் ஒன்றான மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள குமாரவயலூரில் மக்களுக்கு இலவசமாக கை சுத்திகரிப்பான் விநியோகித்து. வேதியல் துறைத் தலைவர் முனைவர். பிரின்சி மெர்லின் அவர்கள் கை சுத்திகரிப்பான்பயன்படுத்தும் முறையை செய்து காட்டினார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரதிகள் வழங்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட இந்த தயாரிப்பு 2 வகைகளில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது. எத்தில் ஆல்கஹால் அடிப்படை கொண்ட வகை ஒன்று, மற்றொன்று ஐசோ ப்ரோப்பைல் ஆல்கஹால் கொண்டது. இரண்டு தயாரிப்புகளிலும் கைகளை பாதுகாக்கவும், ஈரப்பதம் கைகளிலிருந்து குறையாமல் வைக்கவும் கிளிசரின் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பானாக ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கப்பட்டுள்ளளது. எந்தவித தேவையற்ற மணம் மற்றும் நிறக்கூட்டுவான் கலப்படமில்லாமல் WHO வின் பரிந்துரைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பான் குறிப்பாக குமாரவயலூர் இல் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயாபரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...