Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறை அருகே
கிராம மக்களுக்கு தன் சொந்த செலவில் 22 ஆயிரம் கிலோ அரிசி வழங்கிய தி.மு.க பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மரியபாக்கியராணி ஆரோக்கியசாமி. இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய 6 வது வார்டு தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் அவரது வார்டுக்குட்பட்ட 2200 பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் மொத்தம் 22 ஆயிரம் கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார். ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் சமூக இடைவெளியுடன் வந்து வாங்கிச் சென்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்றும் அரிசியை வழங்கினார். தன்னுடைய சொந்த செலவில் தி.மு.கவைச் சேர்ந்த பெண் ஒன்றியக்குழு உறுப்பினர் வழங்கிய இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் மணப்பாறை தேமுதிக மாவட்ட செயலாளர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதி 16 வார்டில் தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் அவர்களது சொந்த நிதியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு நிவாரணமாக அரிசி மற்றும் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக வட்டச் செயலாளர் ராஜா மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் மதுரைவீரன் மனோஜ் இமான் மதன் வெங்கடேஷ் ராஜாராம் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிவாரண பொருளைவழங்கினார்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுக்குளம் ஊராட்சியில்
கொரோனாவால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்திரவு பிறபிக்க பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் மாணவர்ளின் குடும்பங்களின் நலன் கருதி ஊராட்சியில் பல்வேறு நிவாரண உதவி வழங்கபட்டு வருகிறது அதன் தொடர்சியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் 1வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 190 மாணவ மாணவியர்களுக்கு 5கிலோ அரிசி உப்பு மளிகை சாமன்கள் அடங்கிய பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பிராகாஷ் ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி கலைவாணன் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் வழங்கபட்டது இந்த நிகழ்வில் துனை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் , ஊர் பொதுமக்கள் சமூக இடைவெளி காத்து கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரின் இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள அமர் ஜூவல்லரி சார்பில் இன்று ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியத்திடம் 5 லட்சத்துக்கான காசோலையை இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் திருச்சி ஆற்று காவேரி பாலத்தில் தினம்தோறும் ஏழை எளியவர்களுக்கு விடட்டோருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக இது நாட்களாக சுமார்
50 பேர்களுக்கு உணவு வழங்கி வந்த இடத்தில்
தற்போது சுமார் 300க்கு மேற்பட்டோர் வருகின்றனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அனைவருக்கும் உணவு வழங்கும் வகையில்
மாவட்ட நிர்வாகம் விடட்டோரை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்கபட்டு வருகிறது,
மேலும் அம்மா உணவகம் மூலமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது எனவே அதில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
நாடி ஜோதிடர் கூறுகையில் சென்ற ஆண்டு விகாரி வருடம் மார்கழி மாதம் 5-ஆம் தேதி சனிக்கிழமை ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்ததால் உலகத்தில் பலவிதமான தீய சக்திகள் உண்டாகும் போர் நடைபெறும் நிலையில் மதச் சண்டைகள் வலுவடையும் அதை தவிர்த்து இப்படி ஒரு வகையான புதிய வைரஸ் நோய் உண்டாகி வடக்கு வடமேற்கு நாட்டில் நோய் உண்டாகி ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து உள்ளது மேலும் 27. 3 .2020 குரு வக்கிரம் அடைந்த காலத்தில் தொட்டு நோய்த்தொற்று உச்சமாகி உயிரிழப்பு பொருள் இழப்பு பல பெரிய சோதனைகளும் மக்களை மக்களையும் மன்னர்களையும் வாட்டும் அது 8. 7. 2020 பிறகு முழுமையாக 90 சதவீதம் குறைந்துவிடும் மீண்டும் பழைய நிலையை அறிவார்கள் சராசரியான வாழ்க்கை மக்களுக்கு தொடரும்
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*முசிறி அருகே நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை காரில் அழைத்து சென்று விட்ட சமூகதொண்டு நிறுவனம்* .
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் கடலூர் மாவட்டத்திற்கு நடந்துசென்ற கூலித்தொழிலாளர்களை சமூகஆர்வலர்கள் காரில் அழைத்து சென்று சொந்தஊரில் விட்டுவந்த சம்பவம் பொதமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
முசிறி அருகே உள்ள தா.பேட்டை வழியாக நாமக்கல் மாவட்டம், தூசூர் என்ற இடத்திலிருந்து 5 கூலித்தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு கிராமத்திற்கு நடந்துசென்றனர். 144 தடை உத்தரவு காரணமாக தொழிpல்பாதிப்படைந்து வறுமையில் வாடியதாலும், பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், தூசூரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவை நடந்துசெல்வதற்கு முடிவு எடுத்து 30 கிலோமீட்டர் நடந்துவந்த நிலையில் தா.பேட்டையை சேர்ந்த வாசவி தொண்டு நிறுவனத்தினருக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து தா.பேட்டை போலீசாருடன் இணைந்து வாசவி தொண்டு நிறுவனத்தினர் தொழிலாளர்களுக்கு உணவு ,பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிகொடுத்து கார் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு லாரியில் பழங்கள் கொண்டுவந்து கொடுத்த மனிதநேய செயல்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே நாமக்கல் நகரிலிருந்து வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு தனது டிரைலர் லாரி மூலம் பழங்களை கொண்டுவந்து கொடுத்த லாரி டிரைவரின் மனிதநேய செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
நாமக்கல் நகரை சேர்ந்தவர் லாரிடிரைவர் கண்ணன். இவரதுமகன் பிரதீப் இருவரும் டிரைலர் லாரி சொந்தமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் வசிக்கும் குரங்குகள் உணவுக்கு தவிப்பதை கண்டடிரைவர் கண்ணன் நாமக்கல் நகரில் வாழைபழம், தர்பூசணி, ஆகியவற்றை வாங்கி தனது டிரைலர் லாரி மூலம் கொண்டு வந்து சக்கம்பட்டி, கரட்டாம்பட்டி ஆகிய வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு வழங்கினார். லாரிடிரைவர் போக்குவரத்து தடைபட்டதால் நாமக்கல்லில் நிறுத்தியிருந்த தனது லாரி மூலம் குரங்குகளுக்கு பழங்களை கொண்டுவந்து அளித்தசம்பவம் சமூகஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் 23 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.
இம்மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சி
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...



