Wednesday, May 06, 2020

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்


நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 

தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 

வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

Monday, May 04, 2020

On Monday, May 04, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
அரசு பள்ளியில் பயில்வோரின் குடும்பத்தினருக்கு உதவிய ஆசியர்கள்.
அனைவரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய ஆசிரியர்கள்.

கொரோனா அச்சத்தால் நாடே முடங்கிக் கிடக்க ஊரடங்கால் மக்களும் வீடுகளுக்குள் தான் கடந்த 40 நாட்களாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலை மே 17 ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் பள்ளி – கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சமுத்திரம் உயர்நிலைப்பள்ளி என்பது மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அந்த பள்ளியில் சுமார் 244 மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும் கூட அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தான். இந்நிலையில் கொரோனா முடக்கத்தால் நம் பள்ளி மாணவ, மாணவிகளின் குடும்பத்தின் நிலை என்ன ஆனதோ என்று ஏங்கிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் உதவிட முடிவு செய்தனர்.
அதன்படி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 200 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். அந்த டோக்கனில் எந்த நேரத்தில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விபரம் அடங்கி இருந்தது. அதன்படி 1 முதல் 50 வரை என மொத்தம் 4 பிரிவுகளாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பொருட்கள் வாங்க வந்த மாணவ, மாணவிகள் பெற்றோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் வட்டமிடப்பட்டிருந்தது. அந்த வரிசையில் பெற்றோர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி ஒரு பையிலும், மற்றொரு பையில் மளிகை பொருட்கள், காய்கனிகள், பிஸ்கட் உள்ளிட்டவை என மொத்தம் 2 பைகளின் பொருட்கள் தனித் தனியாக வழங்கப்பட்டது.
பள்ளியில் உள்ள 10 ஆசிரியர்கள் தலா 8 ஆயிரம் வீதம் 80 ஆயிரமும் சில நன்கொடையாளர்கள் மூலம் என மொத்தம் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம்



இந்தியா முழுவதும் உள்ள MAHARATNA நிறுவனமான BHEL நிறுவனத்தில் சுமார் 38000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். CORONA பெருந்தோற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசும் BHEL நிறுவனமும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக சம்பள வெட்டு மற்றும் பஞ்சபடி உயர்வை இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஆணை வெளியிட்டள்ளது.

இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று BHEL CITU தொழிற்சங்கம் உரிமை மீட்பு போராட்டத்திற்கு அறைக்கூவல்  விடுத்தது. இதை தொடர்ந்து பெரும்பகுதி BHEL தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து  எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 
சப் கலெக்டர் நேரில் விசாரணை. 


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலையும் மணல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், வருவாய் ஆய்வாளர் ஒருவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனங்களையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்று மணல் கடத்திச் செல்லலாமா என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் சப் கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் எதற்காக மணல் ஏற்றினார்கள்? எவ்வளவு மணல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சப் கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 
கொரோனா நேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வரும் இந்த சூழலில் வருவாய்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக
144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு .என்னை மிளகாய்த்தூள் மஞ்சள் தூள. மல்லித்தூள் 
புலி .பூண்டு .கோதுமை மாவு . உப்பு . காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் திரு.க.விஜயகுமார் மாநிலசெயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் மாவட்ட .ஒன்றிய . நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு
துறையூர் வட்டாட்சியர் திருமதி
எஸ் .அகிலா அவர்கள் துறையூர் சௌபாக்கியா மண்டபத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் துறையூர் கௌரவத் தலைவர் மதுரை வீரன் துறையூர் நகர கௌரவத் தலைவர் மகேஸ்வரன் ஒன்றிய சட்ட ஆலோசகர் சுதாகர் ஒன்றியத் தலைவர் தில்லைநாயகம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினார்கள்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
எந்தவித உதவியுமின்றி பரிதவிக்கும் நாடக கலைஞர்கள். 


வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அரசுக்கு கோரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதனால் எந்த பகுதிகளிலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடைபெறவில்லை. 
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இதுவரை எந்தவித உதவியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
சுமார் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பட்டிச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு கோவில்பட்டி சங்கத்தில் உள்ள நாடக கலைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று நாடக – நடிகர்கள் வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப் பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
கொரோன வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்  தமிழகம் முழுவதும் நிவரணங்களை திமுக கட்சியினர் செய்து வருகின்றனர், 


அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் திமுக கட்சியின்  தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க சமயபுரம் பகுதியில் வசிக்கும் நலிவுற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது, 5 கிலோ அரிசி ,எண்ணெய் உள்ளிட்ட ஒன்பது விதமாக மளிகை பொருட்கள் , பத்து விதமான காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர், சுமார் 500 பேருக்கு வழங்கபட உள்ளது, இன்று  50 நபர்களுக்கு  வழங்கப்பட்டது. நிவரணப்பொருட்களை மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர், இளங்கோவன், ஆகியோர் வழங்கினர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துறை, ராஜசேகரன், சார்லஸ், அருவுடைநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.