Tuesday, March 16, 2021

On Tuesday, March 16, 2021 by Tamilnewstv   

 திருச்சி மண்ணச்சநல்லூர்  திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது


இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு  கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலில் பதவியேற்றுள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக என்னால் உணர முடிகின்றது.எனவே மண்ணச்சநல்லூர்  தொகுதி மக்கள் வேட்பாளர் கதிரவனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்கள் கதிரவனை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் கதிரவன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் முடிவில் நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

On Tuesday, March 16, 2021 by Tamilnewstv   

 திருச்சியில் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு 


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக  திமுக தலைமை அறிவித்தது.


இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உட்பட்ட குணசீலம் கோவிலில் தெய்வ தரிசனம் செய்தார். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் கதிரவன் மற்றும் முதன்மை செயலாளர் நேருவின் மகனுமான அருண் நேருவுடன் உடன் திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் மற்ற கட்சிகளில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

Monday, March 15, 2021

On Monday, March 15, 2021 by Tamilnewstv   

 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், 


தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஐயா ஆர் விஸ்வநாதன் அவர்களை,

திருச்சி கிழக்கு சட்டமன் ற தொகுதி வேட்பாளர் திரு.ஆர்.மனோகரன்  அவர்கள்,


மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.M. ராஜசேகரன் அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்,

துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீரங்கி சுப்பிரமணியம் அவர்கள், 

லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.விஜய் மூர்த்தி ஆகியோர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டனர் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

On Monday, March 15, 2021 by Tamilnewstv   

 குழுமணி பகுதியில்  சாருபாலா ஓட்டு வேட்டை


 திருச்சி ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


 இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

 இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.

On Monday, March 15, 2021 by Tamilnewstv   

திருச்சி மண்ணச்சநல்லூர்  திமுக வேட்பாளர் கதிரவன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன் கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக  திமுக தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கதிரவனின் சென்னை அறிவாலயத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு, மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் முக்கிய திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்

Friday, March 12, 2021

On Friday, March 12, 2021 by Tamilnewstv   

 ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் MP.பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்துக் பிரம்மாண்டமாக கொண்டாடினர்


திருச்சி  ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் பழனியாண்டி ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக வேட்பாளர் M.P பழனியாண்டி அவரது ஆதரவாளர்கள் சோமரசம்பேட்டை அம்பலகாரர் தெருவில் ஒன்றுகூடி வெடி வெடித்து கொண்டாடினர்.

 பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியின் போது மேக்குடி பெரியசாமி, சோமரசம்பேட்டை சாந்தகுமார், இனியானூர் சாமிதுரை, பள்ளக்காடு கண்ணன், போதாவூர் கவுன்சிலர் சர்வேயர் பழனியாண்டி மற்றும் எம்பி குரூப்ஸை தேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

On Friday, March 12, 2021 by Tamilnewstv   

 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவித்துள்ள இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர் .


திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர். திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Friday, March 05, 2021

On Friday, March 05, 2021 by Tamilnewstv   

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில்  உள்ள நீச்சல் 
குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை  விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு 
அனுமதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல். 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம் விளையாட்டரங்கில் உள்ள  நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு  
நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி அண்ணா 
விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது.

 10 வயது முதல் 65 வயதிற்குடபட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி 

மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள்  தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் விளையாட்டு 
உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில்  மேற்கொள்ளப்பட வேண்டும நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல் முககவசம் அணிதல் நீச்சல் குளத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.

வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள்  அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை 
செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் 
இயங்குவதற்கு அனுமதி இல்லை. 
விதிமுறைகளுடன்  பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கபடுவர்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இவ்வாறு தெரிவித்துள்ளார்

Monday, February 22, 2021

On Monday, February 22, 2021 by Tamilnewstv   

 மண்ணச்சநல்லூரில் 758 பேருக்கு ரூ 2 கோடியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை சட்டமன்ற உறுப்பினர்  வழங்கினார் .



 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில்  பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், 758 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் வழங்கினாா்.

சமூக நலத்துறையின் சாா்பில், தனியார் மண்டபத்தில் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆலோசனை படி விழாவில், மண்ணச்சநல்லூர் லால்குடி, புள்ளம்பாடி ஆகிய 3 பகுதியில் உள்ள 758 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவிகளை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் வழங்கினார்.

விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் தமீமுனிஷா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.