Saturday, December 11, 2021
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது
ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமி இயக்குனர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் குரு.அரங்கநாதன் மற்றும் தொழிலதிபர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பயிற்றுநர்கள் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இங்கு படித்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, November 14, 2021
குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டியில் தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்திய பிஞ்சு குழந்தைகள்.....
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பாங்க் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது இந்த ஓவிய போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர் இதற்கான ஏற்பாட்டை பேங்க் ஆப் இந்தியா சிலை கிளையின் ஊழியர்கள் செய்திருந்தனர்
கிளை மேலாளர் மணிவண்ணன் பாங்க் ஆப் இந்தியா கூறுகையி்ல் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது
குறைந்த வட்டியில் லோன் பற்றிய விழிப்புணர்வாக குழந்தைகள் வீடுகள் மற்றும் கார் படங்கள் வரைந்து காட்டினர் இந்த ஓவியப் போட்டியில் சிறப்பு ஓவியங்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என கிளை மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
Tuesday, October 05, 2021
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!!
பொதுநல வழக்கறிஞர் திரு. வேங்கை ராஜா அவர்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
பின்னர் மாண்புமிகு. நீதிபதி அவர்கள் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து வழக்கறிஞருடன் பொதுநலவழக்குகள் குறித்தும் பொதுநல வழக்குகள் தொடுப்பவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த என்ன என்ன பாதுகாப்பு உள்ளது என்பதனை வலியுறுத்தியும் ஆலோசனை நடத்தப்பட்டது. பிறகு இயற்கை வளங்களைக் காப்பது குறித்தும் இயற்கை வளங்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மூலிகைகளைப் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக புரியும் வண்ணம் எடுத்துரைப்பது பற்றியும், பொதுமக்களின் பாதுகாப்பு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
மேலும் பொது நலன் பாதுகாப்பு பொதுமக்களின் பாதுகாப்பு இயற்கை வளங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் மாண்புமிகு நீதிபதி அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது
Thursday, September 30, 2021
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு உற்சாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூர் செல்வதற்காக திருச்சி வருகை தந்தார்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில், திருச்சி - மதுரைசாலை சாரநாதன் பொறியியல் கல்லூரி அருகில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு, நம் தலைவரின் திருமுகம் காண ஏராளமானோர் குவிந்தனர்
இந்நிகழ்வில்,திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக, வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன்,திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்மணவை தமிழ்மாணிக்கம்,திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர்,மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா ஷேக் முகமது தலைவரின் நேர்முக உதவியாளர் அடைக்கலம் , மைக்கேல் ராஜ் அரசியல் ஆய்வு உறுப்பினர் பாலுச்சாமி தெற்கு மாவட்ட அவைத்தலைவர்
மற்றும்திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,திருச்சி மாநகர பகுதிக்கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் - தொண்டர்கள் அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சி திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது
இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில் பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜாவிற்கு சால்வை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
தனது பிறந்தநாளுக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் இந்த பிறந்தநாள் விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது எனவும் கூறினார்
Monday, September 27, 2021
திருச்சி பெட்டவாய்த்தலை செல்லும் வழியே உள்ளே தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி சமுதாய வளைகாப்பு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் தலைமையில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோகிலா கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் வளைகாப்பு ஜாதி மதம் பேதமின்றி அனைத்து சமுதாய கர்ப்பிணி பெண்களுக்கும் அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்
மாமிசங்களை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அரசு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் எப்பொழுது தங்களுக்கு தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அணுகி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் பிரசவிக்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று திருமண மண்டபம் கர்ப்பிணி பெண்களுக்கு என்று கேட்டவுடன் இலவசமாக அனுமதி அளித்த திருமண மண்ட உரிமையாளருக்கும் நன்றி தெரிவித்தார்
Wednesday, September 15, 2021
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர்டி. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி.சந்திரசேகரன் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சின்னதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுருளி என்கிற நீலகண்டன், மதுரை பாண்டியன், மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் ஜோதி பாண்டியன் ,மாயி பாலு ,வினோத் மண்ணச்சநல்லூர் ஒன்றியசெயலாளர் பாட்ஷா கணேசன், மாரியப்பன், ஈச்சம்பட்டி போஜன், மண்ணச்சநல்லூர் பழனியாண்டி,ஜோசப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

















