Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
தமிழகத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் 700 மழலையர் பள்ளிகளை மூடுவதுக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடிப்படை வசதியில்லாது புதிது புதிதாக மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும், இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடனடியாக சேர்ந்து விடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியது.இதை அடுத்து, இப்படிப்பட்ட பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பள்ளிக்கல்வித் துறை அறிக்கையின் படி தமிழகத்தில் சுமார் 700 மழலையர் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இவைகளை உடனடியாக மூடிவிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்ததாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 comments: