Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
தீவிரவாதி என்று சொல்லப்படும் ஹபீஸ் சையத்தை சந்தித்த விவகாரத்தில் பத்திரிகையாளர் வேத பிரதாப் வைதிக் மீது வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையத்தை, பத்திரிகையாளரும், பாபாராம்தேவின் நண்பருமான வைதிக், பாகிஸ்தான் சென்று சந்தித்து வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து, இரு அவைகளிலும் அமளி நிலவிவந்தது.
இந்நிலையில் வைதிக் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனுத் தொடுத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 25ம் திகதிக்கு மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

0 comments: