Thursday, July 17, 2014

On Thursday, July 17, 2014 by Anonymous in    
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்துள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு நேர்ந்து வருகிறது என்கிற காரணத்தால், டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி கடந்த இரண்டு வருடங்களாக டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இழப்பை ஈடு செய்து வந்தன.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த இழப்பு என்பது கடந்த மார்ச் மாதத்தில் 8 ரூபாய் 37 காசாக இருந்தது என்றும், இப்போது 2 ரூபாய் 49 காசாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளதால், மாதம் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தியதும் இந்த இழப்புக் குறைந்ததற்கு காரணம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

0 comments: