Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in , ,    

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசனார் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி: திருப்பூர் தி.மு.க. அறிக்கை
திருப்பூர் பெரியார் காலனி நேதாஜி நகரில் வசித்து வருபவர் நாகமணி (வயது33). இவரது கணவர் ரங்கசாமி. இவர்களுக்கு கலைவாணி (15) என்ற மகள் இருந்தார். கணவன்– மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாகமணி கணவர் ரங்கசாமியை விட்டு பிரிந்து தனது மகளுடன் திருப்பூரில் குடியேறினார்.
தனது மகள் தான் உலகம். அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலைவாணி 2 பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் மன வேதனையில் இருந்தார். தாய் நாகமணி மகளுக்கு ஆறுதலும் தன்னம்பிக்கையும் கூறி வந்தார். 
இதனையடுத்து உடனடி தேர்வில் கலைவாணி தோல்வியடைந்த 2 பாடங்களையும் எழுதினார். தேர்வு முடிவு வெளியானது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இதை அறிந்த தாய் தொடர்ந்து மகளுக்கு ஆறுதல் கூறிவந்தார்.
இந்நிலையில் தோழிகள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கலைவாணி அவமானத்தால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்று தாய் வேலைக்கு சென்ற பின்னர் கலைவாணி வீட்டில் இருந்த சாணிப்படரை குடித்தார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டது. தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ளவர்களிடம் நான் விஷம் குடித்து விட்டேன். எனது அம்மாவிடம் கூறிவிடுங்கள் என்று கூறி மயங்கி விட்டார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது தாய் நாகமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது மாமாவிற்கும் தெரியப்படுத்தினர். 2 பேரும் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். கலைவாணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக இறந்தார். கணவரை விட்டு பிரிந்து மகளே தனது உலகம் என்று வாழ்ந்த நாகமணி மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: